/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-125532-2025-08-16-12-56-05.jpg)
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அன்பே வா" சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் விராட் அவர் காதலித்து வந்த "நவீனா" என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் "மகாபலிபுரத்தில்" நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விராட் தன்னுடைய காதல் வாழ்க்கை மற்றும் அதன் பிறகு எப்படி இருக்கிறது என்பதை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் தன்னுடைய திருமணத்திற்கு தன்னுடைய அம்மாவே சம்மதிக்கவில்லை என்றும் அதற்கு பிறகு வீட்டில் நடந்த பிரச்சனைகள் குறித்தும் விராட் மற்றும் அவருடைய மனைவி பேசியிருக்கிறார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு ஆரம்பத்தில் விராட் வீட்டில் சம்மதிக்கவில்லையாம். விராட்டின் அம்மா இவர்களுடைய காதலுக்கு சம்மதிக்காததால் சில மாதங்கள் அவருடைய வீட்டிற்கே போகவில்லை என்றும் திருமணத்திற்கு பிறகு கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நேர்காணலில் தொகுப்பாளினி நவீனாவிடம் "ஏற்கனவே முதல் வாழ்க்கையில் மிஃகியவும் கஷ்ட பட்டவர் நீங்கள். அடுத்தது ஏன் இந்த முடிவு?" என்று கேள்வியை கேட்டார்.
அதற்க்கு நவீனா, "நான் என்னுடைய முதல் வாழ்க்கையில் மிகவும் கஷ்ட பாட்டன். பல ஆண்டுகால அதே வாழ்க்கையை தான் வாழ்ந்தேன். எனக்கு வெளியில் வருவதற்கு தைரியம் வந்ததே இல்லை.
என்னுடைய பெண் குழந்தை பிறந்து போது கூட எனக்கு அந்த தைரியம் வரவில்லை. அந்த வாழகியில் இருட்னது வெளியே வருவதற்கு நிறைய தடைகள் இருந்தது. என் சொந்த குடும்பபெ அதற்க்கு சம்மதிக்க வில்லை.
அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வருவதற்கு என்னை வலுப்படுத்திக்கொண்டு தான் வந்தேன், அதன் பிறகு நிறைய காலங்கள் கழித்து தான் வேறு வாழக்கையை பற்றி யோசித்தேன்.
அதற்க்கு மீண்டும் என் குடும்பத்தினரை ஒற்றுக்கொள்ள வைப்பதற்கு கடினமாக இருந்தது." என்று கூறினார்.
அடுத்ததாக விராட்டியிடம் இந்த வாழக்கையை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்ற கேள்வியை தொகுப்பாளினி கேட்க, அதற்க்கு விராட், "நான் இந்த வாழ்க்கயை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் நவீனா தான். அவர் என்னிடம் பழகிய விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
என்னுடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. என் அம்மா என்னை பொதி பொதி வளர்த்தார்கள் ஆனால் அது எனக்கு பிடிக்காது. நான் என்னுடைய வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விரும்பினேன்.
நவீனாவுக்கு 15 வாய்த்தில் ஒரு மகள் இருக்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அந்த குழந்தை ஒரு தந்தை பாசம் இல்லாமல் வளர கூடாது என்பதையும் பற்றி யோசித்தேன். அவர் வெகு நாட்களுக்கு என்னை அப்பா என்று அசகிக்கவே இல்லை.
இப்போது சமீபத்த்தில் தான் என்னை டாடி என்று நவீனாவிடம் பேசியபோது கூறியிருக்கிறார். அப்போது எனக்கு இருந்த அந்த உணர்வை விவரிக்கவே முடியாது. மிகவும் சந்தோஷமாக உணர்தேன்." என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த முடிவால் கமெண்ட்கள் பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.