/tamil-ie/media/media_files/uploads/2022/03/Nayanthara.jpg)
Actress Nayanthara Director Vigenesh Shivan New Car Update : தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ள நயனதாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படத்தின் மூலம் ஹிந்தியின் அறிமுகமான உள்ளார்.
மேலும் தமிழில் விக்னெஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியா நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த நயன்தாராவுக்கு அவருடன் காதல் ஏற்பட்டது
தொடர்ந்து இருவரும் காதலர்களைாக பல இடங்களில் சுற்றி வரும் நிலையில், ரவுடி பிச்சர்ஸ் என்ற பெயரில் பல படங்களை தயாரித்தும் வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக நயன்தாரா டிவி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் புதிதான கார் வாங்கியுள்ளனர். இந்த காருக்கு பூஜை போடுவதற்காக சென்னை பாடிகாட் முனீஸ்வரர் கோவிலுக்கு இருவரும் திடீர் விசிட் அடித்துள்ளனர். இவர்கள் திடீர் வரவினால் அப்பகுதியில் ரசிகர்கள் கூட்டம் கூடினர். தொடர்ந்து தங்களின் காருக்கு பூஜை செய்த நயன் விக்னேஷ் இருவரும் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். இது தொடர்பாக புகைப்படஙகள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.