/tamil-ie/media/media_files/uploads/2022/07/Nayanthara.jpg)
ஹனிமூனை முடித்த நயன்தாரா படப்பிடிப்புக்கு சென்றபோது அவரது பாதுகாவலர்களாகன பவுன்சர்கள் நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னி்ந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ந் தேதி திரமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றளர்.
அதனைத் தொடர்ந்து மறுவீடு அழைப்பு தாய்லாந்து ஹனிமூன் என பிஸியாக இருந்த விக்கி – நயன் ஜோடி தங்களது ஹனிமூன் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றனர். இவர்கள் பதிவிட்ட அனைத்து புகைப்படங்களும் வைரலாக பரவியது.
மேலும் ஹனிமூன் சமயத்தில் நயன் விக்கி போட்டோஷூட் எடுத்துள்ளனர். தற்போது ஹனிமூனை முடித்துவிட்டு படப்பிடிப்பு தொடர்பான பணிகளில் இருவரும் இறங்கியுள்ளனர். இதில் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
Nayanthara's Bodygaurds Misbehave With Media, Incident Caught On Video #nayanthara#Spotted#FirstIndiaFilmypic.twitter.com/4fNxIo77Gv
— First India filmy (@firstindiafilmy) June 28, 2022
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நயன்தாரா காரில் புறப்பட்டபோது பத்திரிகையாளர்கள் அவரை படமெடுக்க முயன்றனர். அப்போது நயன்தாராவின் பாதுகாவலர்களான பவுன்சர்கள் போட்டோக்கள் எடுக்க கூடாது என்று கூறி பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எல்லை மீறி நடந்துகொண்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.