சூப்பர் ஸ்டார் ஏரியாவில் லேடி சூப்பர் ஸ்டார்; போயஸ் கார்டனில் வீடு வாங்கிய நயன்தாரா

Actress Nayanthara buys 4BHK flats in poes garden: போயஸ் கார்டனில் 4BHK வீடு வாங்கிய நயன்தாரா; விரைவில் குடிபெயர உள்ளதாக தகவல்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையின் காஸ்ட்லி ஏரியாவான போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ளார்.

தமிழ் திரையுலகில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமைக்குரியவர். நயன்தாரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தென்னிந்தய சினிமா மட்டுமல்லாது, நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, தெலுங்கில் காட் ஃபாதர் என்ற படத்திலும், மலையாளத்தில் கோல்டு என்ற படத்திலும் தமிழில் கனெக்ட் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  

இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையின் விவிஐபி ஏரியாவான போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள புகழ் பெற்ற அப்பார்ட்மெண்டில் நான்கு பெட்ரூம்களை கொண்ட இரண்டு வீடுகளை நடிகை நயன்தாரா வாங்கியுள்ளார். பல கோடி மதிப்புள்ள இந்த வீட்டிற்கு விரைவில் ஒரு நல்ல நாளில் நயன்தாரா குடி பெயர போகிறாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில் உள்ள நிலையில், லேடி சூப்பர் ஸ்டாரும் அப்பகுதியில் குடியேறப்போகிறாம். ஏற்கனவே ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷும் போயஸ் கார்டனில் இடம் வாங்கி பிரம்மாண்டமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு தனது காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress nayanthara buys 4bhk flats in poes garden

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express