/tamil-ie/media/media_files/uploads/2019/02/nayanthara-caravan-checked-by-police.jpg)
nayanthara caravan checked by police, நயன்தாரா
சினிமா படப்பிடிப்பில் நயன்தாரா பயன்படுத்திய சொகுசு கேரவனை கேரள மாநில சாலை போக்குவரத்து அதிகாரிகள் சோதனை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா மாநிலம் கொச்சியில் கலம்சேரி என்ற இடத்தில் படத்தின் ஷூட்டிங் நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் நடிகை நயன்தாராவும் பங்கேற்றார். அங்கு நடிகர், நடிகைகள் ஓய்வெடுக்க மூன்று சொகுசு கேரவன்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
நயன்தாரா கேரவனில் சோதனை
மூன்று வேன்களில் ஒரு சொகுசு வேனை நயன்தாரா பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் வேனில் அவர் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, அங்கு சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர்.
இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மூன்று சொகுசு வேன்களுக்கும் வரிகள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் 3 வேனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.2லட்சம் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்திய பின் வேன்கள் விடுவிக்கப்பட்டன.
இறுதியில், இந்த சொகுசு வேன் நயன்தாராவுக்கு சொந்தமானது அல்ல என்றும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும் படக்குழுவினர் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.