scorecardresearch

நயன்- விக்னேஷ் ரொமான்ஸ் போட்டோஸ்: ஓணம் இப்படியா கொண்டாடுவாங்க?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் – இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக  ரொமான்டிக்காக ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓணத்தை இப்படியா கொண்டாடுவார்கள் என்று கேட்டு வருகின்றனர்.

actress nayanthara, director vignesh shivan, onam celebrating photos goes viral, நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ், ஓணம் பண்டிகை, onam festival, onam nayanthara vignesh shivan romantic photo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் – இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக  ரொமான்டிக்காக ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓணத்தை இப்படியா கொண்டாடுவார்கள் என்று கேட்டு வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது காதலிப்பது என்பது அனைவரும் அறிந்தது. இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சென்று அங்கே புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர்.

அப்படி, இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகத் தவறியது இல்லை.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னையிலேயே இருந்த நடிகை நயன்தாரா தனது சொந்த ஊரான கொச்சி சென்று ஓணம் கொண்டாட முடிவு செய்தார். அதனால், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னையில் இருந்து தனியார் சார்டர்ட் தனி விமானத்தில் நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சிக்கு பறந்து சென்றனர். விமானத்தில் செல்லும்போது, விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானாது.

அதே போல, கொச்சியில் தனி விமானத்தில் இருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இறங்கும்போது எடுக்கப்பட்ட மிகவும் ஸ்டைலான அந்த புகைப்படம் வைரலாகி சமூக ஊடகங்களை சலசலக்க வைத்தது.


விக்னேஷ் சிவன் சிவப்பு டிசர்ட், ஜீன்ஸ் பாண்ட்டிலும் லேடி சூப்பர் ஸ்டார் கருப்பு உடையிலும் கலக்கலாக இருக்கும் வீடியோ இணையத்தை கலக்கிவருகிறது.

இதையெல்லாவற்றையும்விட, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரொமாண்டிக்காக ஓணம் கொண்டாடிய புகைப்படம்தான் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் ஹாட் டாக்காக மாறியிருக்கிறது.


விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையிலும் நயன்தாரா கேரள பாரம்பரிய சேலையிலும் மிகவும் நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ஓணம் இப்படியா கொண்டாடுவாங்க? என்று விவரமாக கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress nayanthara director vignesh shivan onam celebrating photos goes viral

Best of Express