ஆடியோ விழாக்களுக்கு போகாத காரணமே இதுதான்: மனம் திறந்த நயன்தாரா

தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான ப்ரமொஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் நயன்தாரா பங்கேற்று வருகிறார்.

தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான ப்ரமொஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் நயன்தாரா பங்கேற்று வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nayanthara2

நடிகை நயன்தாரா

கனெக்ட் படம் தொடர்பான நேர்காணால் ஒன்றில் பங்கேற்றுள்ள நடிகை நயன்தாரா தான் ஏன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்காரே என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு விஸ்மயதொன்பாது, நாட்டுராஜாவு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 2002-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முதல் படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்த நயன்தாரா அடுத்து ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நயன்தாரா தொடர்ந்து, கஜினி, தலைமகன், வல்லவன், பில்லா, வில்லு, ராஜா ராணி, ஆரம்பம், தனிஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சிவகாசி, மற்றும் சிவாஜி உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள நயன்தாரா ஒரு கட்டத்திற்குமேல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த மாயா, ஐரா, கோலமாகவு கோகிலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment
Advertisements

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளமத் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்நடித்து வரும் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மாலையாளத்தில் கோல்ட், தெலுங்கில் காட்ஃபாதர் உள்ளிட்ட படங்கள் வெளியானது. தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொதுவாக சினிமா நடிகர் நடிகைகள் தங்கள் நடித்துள்ள படங்களின் ப்ரமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித், தான் நடித்து வரும் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அதுபோல் நடிகை நயன்தாராவும் தனது படத்தின் ப்ரமஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.

தொடக்கத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நயன்தாரா கடந்த சில வருடங்களாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன் என்று சொல்லி அக்ரிமென்ட் போட்டுதான் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கான ப்ரமொஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் நயன்தாரா பங்கேற்று வருகிறார்.

இதனிடையே கனெக்ட் படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் வகையில் சமீபத்தில் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நயன்தாரா திரைத்துறையில் பெண்களுக்கு மதிப்பு இல்லை. ப்ரமோஷன் நிகழ்ச்சளில் பங்கேற்றாலும் எங்காவது ஒரு ஓரமாக நிற்கவைத்துவிடுவார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் மாறிய பிறகு ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கடைசிவரை என்றால் அதை செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: