சீனியர் நடிகருக்கு ஜோடி: பெரிய சம்பளம் கேட்ட நயன்தாரா? தயாரிப்பாளர் - இயக்குனர் ஷாக்!

மீபத்தில் வெளியான டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

மீபத்தில் வெளியான டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

author-image
WebDesk
New Update
Nayantharana

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா சீனியர் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க, அதிக சம்பளம் கேட்டதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஹரி இயக்கிய ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, தனது 2-வது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நயன்தாரா, இடையில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதையில் நடிக்க தொடங்கினார்.

இதில் ஒரு சில படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. ஆனால் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதே சமயம் மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி, மண்ணாங்கட்டி, மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட், கன்னடத்தில் யஷூடன் டாக்ஸிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு படத்தில் நடிக்க ரூ10 கோடி சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சீனியர் நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ18 கோடி சம்பளம் கேட்டதால், அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisment
Advertisements

தெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி, அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க, நடிகை நயன்தாராவிடம், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், கதையை கேட்ட நயன்தாரா நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாலும், ரூ18 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதை கேட்ட இயக்குனரும் தயாரிப்பாளரும் அதிர்ச்சியடைந்தாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நயன்தாராவை ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை தேடி போவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே சிரஞ்சீவி நடிப்பில் வெளியான, சைரா நரசிம்ம ரெட்டி, மற்றும் காட் ஃபாதர் ஆகிய படங்களில் சிரஞ்சியுடன் நயன்தாரா நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nayanthanra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: