நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்தில் பிரபுதேவாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், பிரபுதேவாவுடன் நயன்தாரா மீண்டும் இணைகிறாரா என்பதே கோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவை சினிமா ரசிகர்கள் பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். நயந்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துக்கொண்டே மற்றொரு புறம், அறம், கோலமாவு கோகிலா, டோரா என தனி ஹீரோயின் படங்களில் நடித்து வெற்றிநடை போட்டு ஒரு ராஜபாட்டையில் வலம் வருகிறார்.
கோலிவுட்டில் இன்றைக்கு அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் நடிகை நயன்தாராதான். அதே அளவுக்கு அவரைப் பற்றிய கிசுகிசுக்களும் வலம் வருகின்றன. நடிகை நயன்தாரா இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்பட்ட பிரபுதேவாவுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கள் வெளியானது. இந்த விவகாரம் பிரபுதேவா மனைவி ஊடகங்களில் பேசி சர்ச்சையாக்கியதை அடுத்து, நயன்தாரா – பிரபுதேவா காதல் பிரேக்அப் ஆனதாக கூறப்பட்டது.
இதையடுத்து, நடிகர் சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கிசுகிசு கிளம்பியது. இந்த காதலும் பிரேக்அப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நயன்தாராவை காதலிப்பதாகக் கூறும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நயன்தாராவோ விக்னேஷ் சிவனை காதலிப்பது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடிகர் சங்கத்திற்காக நடிகர் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இடையில் ஏற்பட்ட குழப்பங்களால் இந்த படம் கிடப்பில் போனது.
ஆனால், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்து ஆக வேண்டும் என்று உறுதியாக இருப்பதால், இந்தப் படத்தில் நடிகர் விஷாலை நீக்கிவிட்டு படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளாராம். இந்தப் படத்தில் நடிகை ஹீரோயினாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாராவையும் நடிகர் பிரபுதேவாவையும் இணைத்து பேசப்பட்ட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில், பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் நடிகை நயன்தாரா அடுத்த படத்தில் பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறாரா என்பதே கோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு பேச்சாக உள்ளது.
இதற்கு முன்பு, நடிகை நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்திலும் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.