Advertisment

விக்னேஷ் சிவன் இதுவரை அப்படி கேட்டதே இல்லை: மனம் திறந்த நயன்தாரா

நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் என்னைக்குமே நீங்க ஏன் இதை பண்றீங்க, இது எதுக்கு நீங்க பண்றீங்கனு என்னைக்குமே கேட்டது கிடையாது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nayanthara

நடிகை நயன்தாரா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் நான் இன்னும் மிகப்பெரிய விஷயங்களைப் பண்ணனும்தான் கத்துக்கொடுத்திருக்கிறாரே தவிர, என்னைக்குமே நீங்க ஏன் இதை பண்றீங்க, இது எதுக்கு நீங்க பண்றீங்கனு என்னைக்குமே கேட்டது கிடையாது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, கடந்த ஆண்டு அழகு சாதன பொருட்கள் விற்கும்  நிறுவனத்தை தொடங்கினர். இதன் மூலம், தொழில் முனைவோராக இருவரும் களம் இறங்கினர். இதைத் தொடர்து, நயன்தாரா அவர்களது நிறுவனத்தின் சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார்.

அவர்கள் நிறுவனத்தின் சானிட்டரி நாப்கின் நல்ல விற்பனையாகியுள்ளது, இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி விழா நிகழ்ச்சியில், நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பேசியாதாவது: “இது ரொம்ப சுயநலமா இல்லையானு சில பேர் கேப்பாங்க. இதில் சுயநலம் இருக்கு. ஆனால் அந்த சுயநலத்திற்கு பின்னாடி இருக்கிற பொதுநலம் தான் அதை நியாப்படுத்துகிறது. நாங்க சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இது எல்லாருக்குமே ஒரு தொழில் தான். எல்லாருக்குமே பணம் வருகிறது, அது சந்தோஷமான விஷயம் தான். 

ஒவ்வொரு பெண்ணும், அவரவர் வீட்டில் இருக்கும் அப்பாவிடமோ, அண்ணனிடமோ காசு வேண்டும் என கேட்க தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை நீங்களே பண்ணிக்கிறீங்க. அதற்கு ஒரு வாய்ப்பாக கோமதி மேடம் வழங்குகிறார். அவருடன் இணைந்து ஃபெமி 9 நடத்துவது ரொம்ப முக்கியமானது.

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் போய் சேரவில்லை என நினைக்கிறேன். இதற்கு முன்னாடி எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. ஆனால் இன்றைக்கு ஒரு மேடையில் இவ்ளோ ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் இடத்தில், அனைவரின் முன்னாடி சானிட்டரி நாப்கின் என்று சொல்றோம். அதுவே மிகப்பெரிய மாற்றம்.

ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரம் நிறைந்த சானிட்டரி நாப்கின் கொடுக்க வேண்டும்.

இங்கே நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது, என் கணக்கு தப்பா இல்லைன்னா இதுவரை ஒரு கோடி சானிட்டரி நாப்கின்களை விற்றுள்ளோம். இந்த சாதனைக்கு நீங்கள் அனைவரும் போட்ட பெரும் உழைப்பு தான் காரணம் என ஃபேமி9 ஊழியர்கள்” என்று நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களை ஊக்குவித்து நயன்தாரா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் பற்றி பேசியதாவது:   “எப்போதுமே நம்ம காதுல விழுந்திருக்கிற விஷயம் வந்து ஒவ்வொரு ஆணுக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்க, அப்படிங்கறதுதான், ஆனால், ரொம்ப அரிதாக நாம பார்க்கிற விஷயம், நான் அந்த மாதிரி பார்த்தது இல்ல, ஆனால், இன்னைக்கு ரொம்ப வெற்றிகரமாக இருக்கிற எல்லா பெண்கள், ரொம்ப சந்தோஷமாக இருக்கிற எல்லா பெண்களுக்கு பின்னாடி கண்டிப்பாக ஒரு ஆண் இருக்கிறாங்க... 

என் வாழ்க்கையில் நான் பண்ற சில விஷயங்கள், சினிமா தவிர, சினிமா நான் ரொம்ப வருஷமாக பண்ணிகிட்டிருக்கேன். ஆனால், நடுவுலதான் நான் என் கணவரை சந்தித்தேன். கல்யாணம் பண்ணேன். என்னைக்கு அவரை சந்தித்தோனோ அன்னையிலிருந்து நான் இன்னும் மிகப்பெரிய விஷயங்களைப் பண்ணனும்தான் எனக்கு கத்துக்கொடுத்திருக்கிறாரே தவிர, என்னைக்குமே அவர் நீங்க ஏன் இதை பண்றீங்க, இது எதுக்கு நீங்க பண்றீங்கனு என்னைக்குமே கேட்டது கிடையாது. 

இதுக்கு முன்னாடி நான் என்ன நினைச்சிட்டு இருந்தேன்னா, யாரும் நம்மல கேள்வி கேட்கலனா அது ஒரு மிகப்பெரிய விஷயம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனால், அந்த கேள்வி கேட்கலனுங்கறது விஷயம் கிடையாது. நீங்க ஏன் இந்த விஷயம் பண்ண மாட்டேங்குறீங்க, உங்களிடம் நிறைய விஷயங்கள் செய்வதற்கான திறன் இருக்கிறது, நீங்கள் ஏன் இதோட நிறுத்தனும், நீங்க ஏன் இதை பண்ணக் கூடாது என்று கேட்கிறவர்தான் அவர். என்னுடைய மிகப்பெரிய ஆதரவு, என்னுடைய மிகப்பெரிய பலம், என்னுடைய பிராண்ட் அப்படினு இருக்கிறது என்னுடைய அறிவோ, நான் கிரியேட் பண்ணதோ கிடையாது, இது அவங்க (விக்னேஷ் சிவன்) கிரியேட்  பண்ணது, ஆனால், இப்படி ஒரு விஷயம் நாம பண்ணனும், நாம சமூக பொறுப்புடன் சில விஷயங்கள் பண்ணனும்ங்கறது, கத்துக்கொடுத்தது, இதை கிரியேட் பண்ணது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கறதுக்கும், எங்கள் எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கறதுக்கும் எல்லாத்துக்குமே காரணம் அவர்தான், அதனால், அவருக்கு மட்டும் தனியா ஒரு நன்றி சொல்லிக்கிறேன். நன்றி” என்று நயன்தாரா க்யூட்டாகப் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment