இது நடந்தால் கல்யாணமாம்… அது எப்போ நடக்குறது?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், நயன்தாரா தான் தேசிய விருது வென்ற பிறகுதான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

By: Updated: October 3, 2020, 10:58:51 AM

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், நயன்தாரா தான் தேசிய விருது வென்ற பிறகுதான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் மிக்க அறம், கோலமாவு கோகிலா, டோரா, ஐரா ஆகிய படங்களில் நடித்து வெற்றி படங்களாக கொடுத்துள்ளார்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலானது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் தொற்று பொது முடக்க காலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், ஓணம் பண்டிகையைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோடியாக தனி விமானத்தில் கொச்சிக்கு சென்று கொண்டாடினார்கள். அதன் பிறகு, கோவா சென்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதற்குப் பிறகு, கோவாவில் இருந்து இருவரும் ஜோடியாக தனி விமானத்தில் சென்னைக்கு வந்தனர்.

இப்படி உல்லாசப் பறவைகளாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடிக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் எப்போது திருமணம் என்று கேள்விக்கு பதிலளிக்கையில், தனக்கு நயன்தாராவுக்கும் இடையே எப்போது காதல் திகட்டிப் போகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்வோம். அதுவரை காதலித்துக்கொண்டிருப்போம் என்று கூறினார். அதே போல ரசிகர்களும் சமூக ஊடகங்களில் நயன்தாராவிடம் எப்போது திருமணம் என்று கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா சினிமாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற பிறகுதான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். நயன்தாரா தான் சினிமாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற பிறகுதான் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவின் இந்த முடிவைக் கேட்ட ரசிகர்கள், அவர் எப்போது தேசிய விருது வாங்குவது எப்போது கல்யாணம் ஆவது என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actress nayanthara plan to get married with vignesh shivan after wining national award

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X