தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நடிகை நயன்தாரா வலம் வருகிறார். இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அதன் பின் அவர்கள் காதலித்து வந்தனர். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ, நயன்தாதாரவின் சொந்த வாழ்க்கை கதை, திரைப் பயணம் என அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஆவணப்படமாக நவ.18-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் சிறிய வீடியோ காட்சி இடம் பெற்றதற்கு தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் பல குற்றஞ்சாட்டுகளை முன்வைத்தும் நயன்தாரா பரபரப்பு கடிதத்தை வெளியிட்டார்.
அந்த கடிதத்தில், ஜெர்மனிய மொழியின் "ஷாடன்ஃப்ரூட்" (Schadenfreude) எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதாவது Schadenfreude' என்பது 'அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்' என்று அர்த்தம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“