ஒரே தென்னிந்திய நடிகை... பெருமையா இருக்கு : குஷியில் லேடி சூப்பர் ஸ்டார்

ஃபோர்ப்ஸ் 100 பணக்கார இந்திய நடிகர்கள் பட்டியலில், தென்னிந்திய நடிகர்களில் ஒரே பெண் நடிகராக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66.75 கோடியுடன்) 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் நயன்தாரா

தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பிரபலங்களில் 17 பேர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கோலமாவு கோகிலா, அறம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த நடிகை நயன்தாரா இப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருடைய வருமானம் இந்த ஆண்டில் மட்டும் 15.17 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம், கொலையுதிர் காலம், பெயரிடப்படாத விஜயின் புதிய படம் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் விரைவில் வெளியாக ஆயத்தமாக இருக்கிறது.

ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-வது இடத்தையும், விஜய் (ரூ.30.33 கோடி) 26-வது இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-வது இடத்திலும் உள்ளனர். சூர்யா (ரூ.23.67 கோடி), விஜய் சேதுபதி (ரூ.23.67 கோடி) இருவரும் 34-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தனுஷ் (ரூ.17.65 கோடி) 53-வது இடத்திலும், டாப்சி (ரூ.15.48 கோடி) 67-வது இடத்திலும், நயன்தாரா (ரூ.15.17 கோடி) 69-வது இடத்திலும், கமல்ஹாசன் (ரூ.14.2 கோடி) 71-வது இடத்திலும் உள்ளனர்.

நயன்தாரா ட்வீட் :

இந்த பட்டியலை பார்க்கும்போது, கமல் ஹாசனையே பின்னுக்கு தள்ளி ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close