கெத்தா… ஜோடியா… தனி விமானத்தில்! நயன்- விக்கி வைரல்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவருடைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவாவில் இருந்து தனி விமானத்தில் கெத்தா ஜோடியா தரையிறங்கிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

By: September 22, 2020, 10:04:22 PM

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவருடைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவாவில் இருந்து தனி விமானத்தில் கெத்தா ஜோடியா தரையிறங்கிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிறார். நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருகின்றனர்.

கடந்த மாதம் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கொச்சிக்கு தனி விமானத்தில் சென்றனர். அங்கே இருவரும் ஓணம் பண்டியை சிறப்பாக கொண்டாடினர். ஓணம் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி விருந்தளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நயன்தாராவுடைய அம்மாவின் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார். இதையடுத்து, நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட திட்டமிட்டு செப்டம்பர் 18ம் தேதி ஸ்பெஷல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து பெரிய அளவில் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாரா 3 மிகப்பெரிய பிரம்மாண்ட கேக் வாங்கினார். அந்த கேக்கிலும் விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதைக் குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் விக்னேஷ் சிவனுக்கு ஸ்பெஷலாக 3 அடுக்கு கெக் ஒன்றையும் வாங்கியிருந்தார். காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாட நயன்தாரா லைவ் மியூஸிக்கை ஏற்பாடு செய்திருந்தார்.

காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாரா ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட ஏற்பாடுகளை வீடியோவில் பார்த்த ரசிகர்கள் நிஜயமாகவே பிரமித்துப்போனார்கள்.


விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான சுற்றுலாவை முடித்துவிட்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோவாவில் இருந்து ஒரு தனி விமானத்தில் புறப்பட்டு சென்னையில் கெத்தா ஜோடியாக தரையிறங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் ஜோடியா தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நயன்தாரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கெத்தா. ஸ்டைலா, விமானத்தில் இருந்து இறங்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actress nayanthara vingneh shivan get down from charted flight photos goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X