நடிகை நஸ்ரியா ரீ எண்ட்ரி... ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே பிரபலமான நடிகை நஸ்ரியா நசீம், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்துகொண்டார். நடிகர் ஃபகத் ஃபசில் மற்றும் நடிகை நஸ்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இருவரின் திருமணத்திற்கு பிறகு, 4 ஆண்டுகள் இடைவேளையைக் கடந்து தற்போது மீண்டும் நடிப்பில் கால் பதித்துள்ளார் நஸ்ரியா. இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கும் ‘கூடே’ படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா. பிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் ப்ரித்விராஜ், நடிகை பார்வதி, ஆகியோரும் நடித்துள்ளனர். முன்னதாக அஞ்சலி மேனன் இயக்கிய `பெங்களூர் டேஸ்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நஸ்ரியா. அந்தப் படத்திற்கு பிறகு தான் இவருக்குத் திருமணமானது. பெங்களூர் டேஸ் படத்திற்கு பிறகு தற்போது தான் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் இவர்.

இதை சிறப்பிக்கும் படியாக படத்தில் இடம்பெறும் ஆராரோ பாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள்.

×Close
×Close