கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழையால் நேற்று (ஜூலை 30) அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், கடுமையான உயிர், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 31) 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி 200 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், சாலியாறு ஆற்றில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட உடல்கள் நிலம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மேப்பாடி அருகே உள்ள மலைப்பகுதிகளில் நேற்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மலப்புரம், நீலம்பூர் வழியில் செல்லும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்ப்டட மக்களுக்கு போர்த்தொழில் படத்தின் நடிகை நிகிலா விமல் உதவி வருகிறார். இவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுவருகிறது. இவர் இந்திய ஜனநாயக சங்கத்தினரால் வழங்கப்பட்டுவரும் நிவாரண மையத்தில் பொருள்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“