தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நிரோஷா, விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில், அவரது கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சமீப காலங்களில் குடும்ப பார்வையாளர்களின் அனைத்து தரப்புகளையும் வென்ற சீரியல்களில் ஒன்று. 2018 இல் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் முடிந்தது. 4 சகோதரர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கும் இடையிலான காதல், வாழ்க்கை மற்றும் போராட்டங்களை மையமாகக் கொண்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை.
ஒளிப்பரப்பாக தொடங்கியது முதல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்து வந்தது. தற்போது சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், சீரியலின் இரண்டாம் பாகத்தை விஜய் டிவி தொடங்கியுள்ளது.
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் படபிடிப்பு ஏற்கனவே நடந்து வரும் நிலையில், விஜய் டிவி ஒரு ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டது. இதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நிரோஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இரண்டாம் பாகத்தின் சிறப்பம்சமாகும். நிரோஷா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் மூத்த சகோதரனாக நடித்த நடிகர் ஸ்டாலினுக்கு ஜோடியாக இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.
/indian-express-tamil/media/post_attachments/5bb9ad84-ac7.jpg)
மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் சகோதரியாவார். அந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். மேலும், முதல் படத்திலேயே நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் கமல்ஹாசன் உடன் ’சூரசம்ஹாரம்’, விஜயகாந்த் உடன் ’செந்தூரப்பூவே’, மீண்டும் கார்த்தி உடன் ’பாண்டி நாட்டு தங்கம்’, ’இணைந்த கைகள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். நிரோஷா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். நடிகை நிரோஷா நடிகர் ராம்கியை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சிறிது காலம் நடிப்புக்கு இடைவெளி விட்டவர், மீண்டும் திரைபடங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் கத்திச்சண்டை, தானா சேர்ந்தக் கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சீரியல்களிலும் நிரோஷா நடித்து வருகிறார். குறிப்பாக’ சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற சீரியல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/20377b4a-2c4.jpg)
இதனிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற நிரோஷாவின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் 'லால் சலாம்' படம் 2024 பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. இதில் நிரோஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“