Advertisment
Presenting Partner
Desktop GIF

நடிகை நிவேதா பெத்துராஜ்ஜை அடையாறு சிக்னலில் ஏமாற்றிய 8 வயது சிறுவன்; இன்ஸ்டாவில் கேள்வி

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை அடையாறு சிக்னலில் புத்தகம் விற்பனை செய்வது போல் வந்த 8 வயது சிறுவன், அவரது கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nivetha Pethuraj

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் Image Source: Instagram

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை அடையாறு சிக்னலில் புத்தகம் விற்பனை செய்வது போல் வந்த 8 வயது சிறுவன், அவரது கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் கெத்து தினேஷ் உடன் ‛ஒருநாள் கூத்து’, நடிகரும் தற்போதைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுடன் ‛பொதுவாக எம்மனசு தங்கம்’, பிரபுதேவாவுடன் ‛பொன் மாணிக்கவேல்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மதுரையை சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் தீபாவளி அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நீல நிற புடவை அணிந்து தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து,  கம்பி மத்தாப்பு மூலம் புஷ்வான வெடியை வெடிக்க வைத்து நிவேதா பெத்துராஜ் வீடியோ பதிவிட்டுள்ளார். நிவேதா பெத்துராஜ்ஜின் இந்த வீடியோவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை அடையாறு சிக்னலில், தன்னிடம் புத்தகம் விற்பனை செய்வதற்காக வந்த 8 வயது சிறுவன் புத்தகத்தை காரில் வீசிவிட்டு, கையில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு ஓடிய சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அடையாறு சிக்னலி 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியிருப்பதாவது: “அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100யை எடுத்தேன்.

அப்போது சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். அப்படியே ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100யை மீண்டும் வாங்கினேன். அப்போது, அந்த சிறுவன் புத்தகத்தை காருக்குள் வீசிவிட்டு, என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்” என கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ், “இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?” எனவும் கேள்வி எழுப்பி Yes, No என்ற ஆப்ஷனை கொடுத்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nivetha Pethuraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment