1994-ல் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மகளிர் மட்டும். கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்த இப்படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர் நடித்திருந்தனர். நாசர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளில் இடம்பெற்ற ‘கறவ மாடு மூணு; காளை மாடு ஒன்னு’ என்கிற பாடல் வேறலெவல் ஹிட் ஆனது.
ஆனால் இந்த பாடலில் கறவ மாடு மூணு என நடிகைகள் ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோரை குறிப்பிட்டு வாலி எழுதியிருந்தார். இந்த பாடல் படமாக்கும் போது பாடல் வரிகளை கேட்டு ஷாக் ஆன நடிகை ஊர்வசி அதெப்படி இந்த மாதிரி வார்த்தையை எழுதி இருக்கிறார்.
அதற்கு நாம் வாயசைத்து நடித்தால், அதை ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும். அது நல்லா இருக்காது. அதனால் நான் அந்த வரியை பாடி நடிக்க மாட்டேன் என ஊர்வசி மறுத்துவிட்டாராம்.
உடனே இயக்குனர் சிங்கீதம் சீனிவாசன் அதற்கு, பால் கறக்கும் பசுவுக்கு அதுக்கு உடம்பு சரியில்லையா என்பதை யாரும் கவனிப்பதில்லை. அது பால் கறக்கிறதா என்பதை தான் பார்க்கிறார்கள்.
அதேபோல தான் குடும்பத்திற்காக ஓடாக உழைக்கும் பெண்களையும் பார்க்கிறார்கள் என்பதை சொல்ல தான் அந்த வரிகளை பயன்படுத்தி இருப்பதாக இயக்குனர் விளக்கம் கொடுக்க. அதையெல்லாம் ஏற்க முடியாது என ஊர்வசி சொல்லிவிட்டாராம்.
ஊர்வசியை போல் நடிகைகள் ரேவதி மற்றும் ரோகிணியும் அந்த பாடலில் நடிக்க முடியாது என போர்கொடி தூக்கியதால் விஷயம் வாலி காதுக்கு சென்றிருக்கிறது. உடனே யார் கேட்டது என வாலி கேட்க, ஊர்வசி என சொன்னதும். ஏன் ஊர்வசிக்கு இந்த விபரீதமான என்னமெல்லாம் வருது.
இதுதான் அர்த்தம்னு விவரமாக சொல்லிட்டு டேக் இட் ஈஸி ஊர்வசினு சொன்னாராம் வாலி. பின்னர் தான் அந்த பாடலை பாடி நடித்தாராம் நடிகை ஊர்வசி.
அதன்பின்னர் தான் காதலன் படத்தில் டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் வந்திருக்கிறது. ஒருநாள் ஊர்வசினு ஒரு பாட்டு வந்திருக்கு கேட்டீங்களானு நடிகை ஊர்வசியிடம் கேட்டிருக்கிறார்கள்.
உடனே அந்த பாட்டை கேட்டுட்டு வாலிக்கே போன் போட்டாராம் ஊர்வசி. இந்த பாட்டு யார வச்சு எழுதுனீங்க என கேட்க, அவரோ உன்னை வச்சு தான் எழுதுனேன் என கூலாக பதிலளித்தாராம்.
அதில் ஊசி போல உடம்பு இருந்தா என்கிற வரிகளில் நீ உடம்பு கூடுவதையும் சொல்லி இருக்கிறேன் என கூலாக ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் வாலி