/indian-express-tamil/media/media_files/LOh2uD3jqAXPrVRra9m8.jpg)
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆனதாக கூறப்படும் நிலையில், இது குறித்த கேள்விக்கு ஓவியாவின் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் களவானி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பின்னர் மெரினா, மதயானைக்கூட்டம், கலகலப்பு, மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் நடிகை ஓவியா மிகப்பெரிய அளவு பிரபலமானது பிக் பாஸ் மூலம் தான். விஜய் டிவியின் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட நடிகை ஓவியா, தனது சிறப்பான நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்தார். வெளிப்படையாக இருந்த அவரது குணத்திற்கு ரசிகர் ஓவியா ஆர்மி என்ற ஒன்றை உருவாக்கினர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் ஓவியா நடித்துள்ளார். தற்போது தமிழில் பூமர் அங்கிள், சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்று கூறப்படும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில், ஓவியாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓவியா அளித்த பதில் ரசிகர்களிடம் பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெட்டிசன் ஒருவர் ஓவியாவிடம் ’வீடியோ ஒன்னு வந்திருக்கு மேடம். 17 செகண்ட்ல’ என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த ஓவியா ’என்ஜாய்’ என்று கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் 'இன்னும் நீளமாக வீடியோ இருந்திருக்கலாம்’ என்று கூறிய போது ’நெக்ஸ்ட் டைம் ப்ரோ’ என்று பதிவு செய்துள்ளார்.
பொதுவாக அந்தரங்க வீடியோ வெளியானால், நடிகைகள் பதட்டம் அடைந்து ’அது நான் இல்லை, மார்பிங் செய்து எடுக்கப்பட்டது’ என்று கூறுவார்கள். ஆனால் ஓவியா அசால்ட்டாக அந்த வீடியோவிற்கு என்ஜாய் என்று பதில் அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் ஓவியாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.