90 எம்.எல் டீசர் சர்ச்சை : ஆர்மி தலைவி ஓவியா கொடுத்த பதில்... ஷாக் ஆன நெட்டிசன்கள்

பிரபல பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியா சமீபத்தில் வெளியான “90 எம்.எல்” டீசர் சர்ச்சைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் களவாணி, கலகலப்பு போன்ற சில கவனக்கக்கூடிய படங்களில் நடித்தவர் ஓவியா. பின் வரும் நாட்களில் பெரிதாக மக்களை கவரும் கதாபாத்திரங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும், பிக் பாஸ் மூலம் லட்சக்கணக்கானோர் மனதை வென்றவர். இவருக்காக ஒரு தனி ஆர்மி, ரசிகர்கள் கூட்டம் என அனைத்தையும் சம்பாதித்தார்.

நடிகை ஓவியா பதில்

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாச வசனங்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், முத்தக்காட்சிகள் என நிறைந்துள்ளது ட்ரெய்லர். இதனையடுத்து இதற்கு சமூக வலைதளங்களில் பலவாறு விமர்சனங்கள் எழுந்தது.

90ML Trailer : ஓவியா படத்திற்கு கடும் எதிர்ப்பு… சர்ச்சையில் சிக்கியுள்ள 90 எம்.எல் படம்

அனிதா உதீப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார். ஆபாசம் நிறைந்துள்ள இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் குறித்தான விமர்சனத்துக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், “பழத்தை ருசிப்பதற்கு முன்பாகவே விதையை பற்றி தீர்மானித்துவிடாதிர்கள். சென்சார் செய்யப்பட்ட முழு படத்தை பொறுத்திருந்து பாருங்கள்” என இரட்டை அர்த்தத்தில் டுவீட் செய்துள்ளார. இதற்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close