Advertisment
Presenting Partner
Desktop GIF

'இதுக்கு ராவணனே பரவாயில்லை': சீதையாக நடித்த பத்மினிக்கு ஹீரோ மீது வந்த கோபம்

பழம்பெரும் நடிகை பத்மினி, சம்பூர்ண ராமாயணம் படத்தில் நடித்தபோது, “இதுக்கு ராவணனே பரவாயில்லை” என்று ஹீரோ மீது கோபப்பட்டதை பேராசிரியர் ஞானசம்பந்தன் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
1 sampoorna ramayanam padmini

பழம்பெரும் நடிகை பத்மினி, சம்பூர்ண ராமாயணம் படத்தில் நடித்தபோது, “இதுக்கு ராவணனே பரவாயில்லை” என்று ஹீரோ மீது கோபப்பட்டதை பேராசிரியர் ஞானசம்பந்தன் பகிர்ந்துள்ளார்.

பழம்பெரும் நடிகை பத்மினி, சம்பூர்ண ராமாயணம் படத்தில் நடித்தபோது,  “இதுக்கு ராவணனே பரவாயில்லை” என்று ஹீரோ மீது கோபப்பட்டதை பேராசிரியர் ஞானசம்பந்தன் பகிர்ந்துள்ளார்.

Advertisment

பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், நடிகர் என பன்முகம் கொண்டவர் பேராசிரியர் ஞானசம்பந்தன். இவர் பழம்பெரும் நடிகை பத்மினியுடனான நட்பு குறித்தும் அவருடைய நகைச்சுவை உணர்வு குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் சுவாரசியமாகக் கூறியுள்ளார்.

நடிகை பத்மினி குறித்து பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், “2003 - 2006 கால கட்டத்தில், நான் நடிகை பத்மினி அம்மா வீட்டுக்கு போவேன். அவர்களிடம் சிறப்பு என்னவென்றால், அவர்கள் நல்லா டான்ஸ் ஆடுவார்கள் இதைத்தானே கேள்விப்பட்டிருப்பீர்கள், அவர் ஒரு அற்புதமான நகைச்சுவையாளர்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குட்டி பத்மினி நடித்த சம்பூர்ண ராமாயணம் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்களை பத்மினி கூறிய நகைச்சுவையான சம்பவத்தை பேராசிரியர் ஞானசம்பந்தன் பகிர்ந்துள்ளார். 

சம்பூர்ண ராமாயணம் படம் எடுக்கும்போது, அந்த படத்தில் என்.டி. ராமாராவ்தான் ராமர். பத்மினி அம்மாதான் சீதை. என்.டி. ராமாராவுக்கு தமிழ் தெரியாதாம். இந்த படத்திற்கு ஏ.பி.நாகராஜன் திரைக்கதை வசனம். இவர் என்.டி. ராமாராவுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க ஒருவரை அமர்த்தியுள்ளனர். ஒரு 15 நாள் கழித்து, என்.டி. ராமாராவ் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவாரென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ் கற்றுக்கொடுக்க நியமிக்கப்பட்ட நபர், என்.டி. ராமாராவ் உடன் தெலுங்கு பேசிக்கொண்டு வந்துள்ளார். தமிழ் கற்றுக்கொடுக்க வந்தவர் என்.டி. ராமாராவ் இடம் தெலுங்கு கற்றுக்கொண்டிருக்கிறார் என்று நடிகை பத்மினி நகைச்சுவையாகக் கூறியதை பேராசிரியர் ஞானசம்பந்தன் கூறியுள்ளார்.

அதே போல, இன்னொரு நகைச்சுவையான சம்பவம்,  அப்போதெல்லாம் லைட்டிங் இல்லாததால் வெயிலில்தான் படப்பிடிப்பு நடக்குமாம், ஆனால், காதல் காட்சியில் அன்பே நாம் எவ்வளவு இன்பமாக இருக்கிறோம் என்று வசனம் பேசிய முரணை பத்மினி நகைச்சுவையாகப் பகிர்ந்ததாக பேராசிரியர் ஞானசம்பந்தன் கூறியுள்ளார்.

அதே போல, சம்பூர்ண ராமாயணம் படப்பிடிப்பின்போது, கொதிக்கும் வெயிலில் ராமரும் சீதையும் ஒகேனக்கல்லில் கொதிக்கும் பாறை மீது உக்காந்திருக்கிறார்கள். அப்போது, அப்போது, என்.டி. ராமாராவ் மெதுவாக, “சீதை, சீதை” என்று மெதுவாக டயலாக் பேசியிருக்கிறார். கொதிக்கும் வெயிலில் கோபம் அடைந்த பத்மினி, வேகமாக பேசித் தொலையா, இதற்கு 'இதுக்கு ராவணனே பரவாயில்லை'” என்று நடிகை பத்மினி பகிர்ந்துகொண்டதை பேராசிரியர் ஞானசம்பந்தன் கூறியிருக்கிறார். 

இதே போல, தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியாகும் கிளாஸிக் ஸ்டோரிஸ் படியுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment