‘கண்களில் ஜெம்ஸ் வரும்னு ஏமாத்திட்டாங்க’ சிறுவயதில் கேமிராவை பார்த்து பயந்த தனுஷ் பட நாயகி
தமிழ் திரை உலகில், பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை பார்வதி தனது சிறு வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னணியையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில், பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை பார்வதி தனது சிறு வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னணியையும் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமா உலகில் பூ, மரியான், உத்தம வில்லன், சார்லி, வைரஸ் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பார்வதி. இன்றும் சசி இயக்கிய பூ, தனுஷ் நடித்த மரியான் பட ஹீரோயின் பார்வதி என்றே ரசிகர்களின் நினைவில் உள்ளார்.
Advertisment
Advertisements
நடிகை பார்வதி தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது நடந்த சுவாரஸியாமான நிகழ்வையும் குறிப்பிட்டுள்ளார்.
பார்வதி அந்த புகைப்படம் பற்றி குறிப்பிடுகையில், “அப்போது நான் கேமிராவை பார்த்து பயந்து நிறுத்தாமல் அழுதிருக்கிறேன். கேமிரா லென்ஸ் ஒரு விசித்திரமான அனைத்தையும் பார்க்கும் ஒரு ஆழமான கண்ணாக என்னை நோக்கியதால், நான் பயந்தேன். புகைப்படத்துக்கு போஸ்கொடுக்க தனியாக நிற்க வைக்க பலமுறை முயன்று தோல்வியடைந்த பிறகு, நான் எப்படியோ என் அம்மாவை விட்டுவிட்டு தைரியமாக தனியாக கேமிரா முன் மிரட்சியான விரிந்த கண்களுடன் நின்றேன். அந்த புன்னகை எப்படி வந்தது. அது எப்படி என்றால் என்னை ஏமாற்றி முட்டாளாக்கிவிட்டார்கள் மக்களே! அப்போது அவர்கள் நான் சிரித்தால் கண்களில் இருந்து ஜெம்ஸ் வெளியே வரும் என்று கூறி (ஜெம்ஸ் என்றால் சாக்லேட் ஜெம்ஸ்.. ரத்தினக் கற்கள் அல்ல) ஏமாற்றிவிட்டார்கள்.
இதெல்லாம் அந்த பயிற்சியில் இருந்து வெளிவந்த ரத்தினங்கள். இதுபோல சிறிய வயதில் நான் துணிச்சலான மிகச்சிறந்த எக்ஸ்பிரஷனில் தேர்ச்சி பெற்றேன். நான் புதிதாக இன்னும் அதை ஒரு கிரீடம் போல அணிகிறேன்!
இப்போது கூட எனக்கு அன்றைய நினைவுகள் தெளிவாக இருப்பதை நான் விரும்புகிறேன். நான் அந்த ஃபிராக்கையும் மிஸ் பண்ணுகிறேன்” என்று பார்வதி மிகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பார்வதி மலையாளத்தில், 'வர்தமனம்', 'ராச்சியம்மா', 'ஹலால் லவ் ஸ்டோரி' மற்றும் தமிழில் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய புதிய படங்களில் நடிக்கிறார்.