/tamil-ie/media/media_files/uploads/2022/01/PAVANI-REDDY.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி சீரியலில் கதாநாயகியாக நடத்திருந்தவர் பாவனி ரெட்டி. அவ்வப்போது போட்டோஷீட் நடத்தி புகைப்படங்கள் பதிவிடுவது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.
இதற்கிடையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை பாவனி காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், எதிர்பாராத விதமாக ப்ரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, மீடியா வாழ்க்கையில் சிறிது காலம் இடைவெளி விட்ட பாவனி , தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.
அண்மையில் முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் இடம்பிடித்திருந்தவர். அவருக்கான தனி இளைஞர் பட்டாளத்தின் ஆதரவுடன், மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். நிகழ்ச்சியில் அபினவ் உறவுடன் சலசலப்பு, அமீரின் காதல் வசனங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில், பாவனி தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அப்போது, அவரிடம் திருமணம் குறித்து ரசிகர் ஒருவர், கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பாவனி, என் வாழ்க்கையில் இனி திருமணம் என்பது இல்லை. என்னுடைய முழு கவனமும் இனி சினிமா, நடிப்பு என்பதில் தான் இருக்க போகிறது என கூறினார். திருமணம் குறித்த பாவனியின் பதிவு, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.