Advertisment

திரும்பி வந்த முக்கிய நடிகை : ரோஜா சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டம்

டாப் 5 சீரியல்களில் முதலிடத்தில் உள்ள ரோஜா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை ஒருவர் மீண்டும் சீரியலுக்குள் வந்துள்ளார். அவர் மீண்டும் ரோஜா சீரியலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Pooja Back in Roja Serial, Roja Serial, Sun TV, ரோஜா சீரியலுகு திரும்பி வந்த நடிகை பூஜா, நடிகை பூஜா, ரோஜா சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டம், roja serial fans celebrates pooja back in roja serial, actress pooja

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பாகிவரும் டாப் 5 சீரியல்களில் முதலிடத்தில் உள்ள ரோஜா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை ஒருவர் மீண்டும் சீரியலுக்குள் வந்துள்ளார். அவர் மீண்டும் ரோஜா சீரியலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முக்கிய இடத்தைப் பிடித்து ரசிகர்களை ஈருத்து வருபவை எப்போதும் சீரியல்கள்தான். தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சீரியல் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களை அது ஒளிபரப்பப்படும் நேரத்தில் தவறாமல் டிவி முன்னால் கட்டிப்போட்டுவிடும். அப்படி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களை ஈர்த்து, டி.ஆர்.பி-யில் டாப் சீரியல்களில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

ரோஜா சீரியல் இடையில் சில வாரம் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாகி வருகிறது. அதோடு, சீரியலின் கதையாசிரியரும் மாற்றப்பட்டார்.

இந்த நிலையில்தான், ரோஜா சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை பூஜா மீண்டும் ரோஜா சீரியலில் நடிக்க வந்துள்ளாராம். ரோஜா சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பூஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் புகைபடம் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பூஜா மீண்டும் ரோஜா சீரியலுக்கு வந்துள்ளதால் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ரசிகர்கள் கதையை கதை கொண்டு செல்லுங்கள் என்று ரோஜா சீரியல் படக்குழுவினருக்கு அறிவுரைகளையும் அளித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sun Tv Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment