நடிகை பூர்ணிமா இந்திரஜித் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பூர்ணிமா - இந்திரஜித் தம்பதிக்கு பிரார்த்தனா, நட்சத்திரா என்று 2 மகள்கள் உள்ளனர்.
பூர்ணிமா இந்திரஜித் மலையாளத்தில் காட்டன் மேரி, நரனது தம்புரான், ரண்டாம் பாவம், குலாபி டாக்கீஸ், வைரஸ் உட்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மலையாள சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்துவரும் தமிழ்ப்பெண் பூர்ணிமா.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/poornima4-300x200.jpg)
கொரோனா அச்சுறுத்தலால் அமலில் உள்ள இந்த பொது முடக்க காலத்தில், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா நடிகர்கள், நடிகைகள் சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்களையும் கியூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுடனான பிணைப்பை புதுப்பித்து வருகின்றனர்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தலை கீழாக நின்று டீ சர்ட் அணியும் சவாலை செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். நடிகை வித்யாபாலன் புடவையில் மாஸ்க் தைப்பது பற்றி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வரிசையில், நடிகை பூர்ணிமா இந்திரஜித் வித்தியாசமாக அண்களின் வேட்டியில் அதாவது ஆண்கள் அணியும் வேஷ்ட்டியை பெண்கள் அணியும் ஸ்கர்ட்டாக தைத்து அசத்தியுள்ளார்.
பூர்ணிமா வேஷ்ட்டியில் தைத்த ஸ்கர்ட்டை அணிந்து அழகாக போஸ் கொடுத்தபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பூர்ணிமாவின் வேஷ்ட்டி ஸ்கர்ட் புகைப்படம் கேரளாவில் சினிமா ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது. பூர்ணிமாவின் வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர். இது விரைவில் விற்பனைக்கு வருமா என்று சிலர் கேட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"