காதலரைக் கரம்பிடித்த கார்த்தி பட நாயகி… வைரலாகும் திருமண புகைப்படங்கள்

Actress Pranitha marry business man Nitin photo goes viral : நிதின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பிரணிதா சுபாஷ், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவை மே  30 ஆம் தேதி திருமணம் கொண்டுள்ளார். இந்த செய்தி  சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. இதை ஒரு வதந்தி என்று தான் நினைத்தார்கள். இப்படி ஒரு நிலையில் நிதின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமாவை பொறுத்த வரை அழகாக இருக்கும் பல்வேறு நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமைவதில்லை. அந்த வகையில் பிரனிதா சுபாஷ்ஷும் ஒருவர். தமிழில் கடந்த 2011ஆம்  வெளியான அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனிதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார்.

அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக அதர்வாவுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கன்னடத்தில் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும்,  தற்போது வெளியாக இருக்கும் புஜ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் பிரணிதாவின் திடீர் திருமணம் அவரது ரசிகர்ளுக்கு ஷாக்காக அமைந்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துக் கொண்டனர். திருமணத்தில் கலந்துக் கொண்ட ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தால் தான் பிரணிதாவின் திருமணம் பற்றி வெளியே தெரிய வந்தது.

இது குறித்து பிரணிதா தெரிவித்தாவது, எனக்கு நிதின் ராஜுவை பல காலமாக தெரியும். எங்களுக்கு பொதுவான நண்பர்கள் இருக்கிறார்கள். இரு குடும்பங்களின் அனுமதி பெற்று மீதமுள்ள வாழ்க்கையை சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தோம். கொரோனாவால் காத்திருக்க வேண்டும் என்று தெரியும். இதையடுத்தே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எளிமையாக திருமணம் செய்து கொண்டோம்.

எனக்கு தனிபட்ட வாழ்க்கையை பற்றி பேச பிடிக்காது. அதனால் எதையும் வெளிப்படையாக செய்ய மாட்டேன். இந்த திருமணம் எனக்கு பிடித்தது போன்றே நடந்துவிட்டது. இதற்கு கொரோனா தான் காரணம். இல்லை என்றால் எளிமையாக நடத்துங்கள் என்று நான் போராட வேண்டியிருந்திருக்கும். ஆனால் தற்போதோ நான் எப்படி விரும்பினேனோ அப்படியே திருமணம் நடந்துவிட்டது. குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். நிலைமை சரியான பிறகு நண்பர்கள், சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு பார்ட்டி கொடுப்பேன். வாழ்க்கையின் இந்த புதிய துவக்கத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பிரணிதா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது பிரணிதா பலருக்கும் உணவளித்து உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress pranitha marry business man nitin photo goes viral

Next Story
மஞ்சக்காட்டு மைனா.. வர்ணிக்கும் ரசிகர்கள்.. பூவே உனக்காக பூவரசி கிளிக்ஸ்..radhika preethi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com