கணவருக்கு பாத பூஜை செய்து அவரின் காலடியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரிணிதாவுக்கு இது ஆணாதிக்கத்தின் உச்சம் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வரும் நிலையில், இதற்கு தற்போது நடிகை ப்ரணிதா பதிலடி கொடுத்துள்ளார்.
அருள்நிதி நடித்த உதயன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. தொடர்ந்து கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள். ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என சில படங்களில் நாயகியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில். நடிகை ப்ரணிதா கடந்த ஆண்டு நிதின்ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் நிதின் ராஜூக்கு பாத பூஜை செய்துவிட்டு அவரின் அருகில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
“பீமனா அமாவாசை” என்று தலைப்பிட்டு தீய கண் தாயத்து ஈமோஜியைச் சேர்த்து பதிவிட்டிருந்தார். பீமனா அமாவாசை பல இந்துப் பெண்களால் தங்கள் கணவர் மற்றும் பிற ஆண் உறுப்பினர்களின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த படம் அப்போது வைரலாக பரவியது.
அதே சமயம் இந்த படத்தை பார்த்த நெட்டின்கள் இது ஆணாதிக்கத்தின் உச்சம் என்று கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது இதற்கு பதில் அளித்துள்ள ப்ரணிதா வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விஷயத்தில், 90 சதவிகிதம் பேர் நல்ல வார்த்தைகளை கூறியுள்ளனர் ஆனால் மற்ற கருத்துக்களை நான் புறக்கணிக்கிறேன்.
நான் ஒரு நடிகை, அதன் களம் கவர்ச்சிக்கு பெயர் பெற்றது, இதற்காக நான் பார்த்து வளர்ந்த ஒரு சம்பிரதாயத்தை முழுமையாக பின்பற்ற கூடாது என்று அர்த்தம் அல்ல, என் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இதை செய்திருக்கிறார்கள். நான் பூஜை செய்தேன். கடந்த ஆண்டும் நான் புதிதாக திருமணமானபோது இதேபோன்று பூஜை செய்தேன், ஆனால் அப்போது படத்தைப் பதிவிடவில்லை
உண்மையில், இது எனக்கு புதிதல்ல. நான் எப்போதும் இதயத்தில் ஒரு பாரம்பரிய பெண்ணாக இருக்கிறேன். சடங்குகள் மற்றும் மதிப்புமிக்க குடும்பத்துடன் தொடர்புடைய அனைத்தையும் நான் விரும்புகிறேன். வீட்டில் இருப்பதுதான் எப்போதும். கூட்டுக்குடும்பத்தில் வாழ்வதும் பிடிக்கும்.சனாதன தர்மம் என்பது மிகவும் அழகானது மற்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு கருத்து. அதில் நான் உறுதியாக நம்புகிறேன்.
ஒருவர் முன்னோக்கிச் சிந்தித்து நவீனமாக இருக்க முடியும், ஆனால் அவர் தனது பாரம்பரியத்தை மறந்துவிடுகிறார் என்று அர்த்தமில்லை. கணவனின் நீண்ட ஆயுளுக்காக மனைவி மட்டும் ஏன் ஜெபிக்கிறாள், என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கேட்டதற்கு, “அது பற்றி விவாதிப்பது அரிது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”