scorecardresearch

முதல்முறையாக ஸ்கை டைவிங்… த்ரிலிங் அனுபவங்களை கூறும் பிரபல நடிகை

கடந்த 2017-ம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்

முதல்முறையாக ஸ்கை டைவிங்… த்ரிலிங் அனுபவங்களை கூறும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தான் முதல்முறையாக ஸ்கை டைவிங் செய்தது குறிதது தனது அனுபவங்களை பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம். எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்விஜயுட் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யானை படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான, திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து பிரியா பவானி சங்கர் தற்போது ராகவா லாரன்ஸின் ருத்ரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், எஸ்.ஜே.சூர்யா உடன் பொம்மை, சிம்புவின் பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 என என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இடையில் தனது காதலனுடன் சுவிட்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பிரியா, தற்போது சுவிட்லாந்தில் தான்ஸ்கை டைவிங் அடித்தது தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், ஹெலிகாப்டரில் பறந்தபடி நடுவானில் இருந்து குதித்துள்ளார். மேலும் முதன்முறையாக தான் ஸ்கை டைவிங் செய்தது குறித்து தனது அனுபவத்தையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில். பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress priya bhavani shankar first time sky diving adventurous video viral