மேயாதா மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் காதல் பிரேக்அப் ஆகிவிட்டதாக வெளியான வதந்திக்கு அவர் சிரித்து வைத்த கியூட் ரியாக்ஷன் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

actress priya bhavani shankar, priya bhavani shankar love break up, பிரியா பவானி சங்கர், பிரியா பவானி சங்கர் புகைப்படம் வைர, பிரியா பவானி சங்கர் காதல் பிரேக் அப், priya bhavani shankar reaction photo goes viral, viral photo, tamil viral news, tamil cinema viral news, tamil viral photo news, latest tamil cinema news
மேயாதா மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் காதல் பிரேக்அப் ஆகிவிட்டதாக வெளியான வதந்திக்கு அவர் சிரித்து வைத்த கியூட் ரியாக்ஷன் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Advertisment
நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கேரியரைத் துவங்கி, விரைவிலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார்.
சீரியலில் வெற்றி பெற்ற பிரியா பவானி சங்கர், சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்து, ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதையடுத்து, காத்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து கவனத்தைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, மான்ஸ்டர், மாஃபியா படங்களில் நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2, இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் தன்னை தக்கவைத்துக்கொண்டு வரும் பிரியா பவானி சங்கர் பற்றி அவ்வப்போது நிறைய கிசுகிசுக்கள் உலா வருவது வழக்கமாக இருந்துவந்தது.
Advertisment
Advertisements
பிரியா பவானி சங்கர் தன்னைப் பற்றி கிசுகிசுக்களுக்கு முடிவு கட்டும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு ராஜ்வேல் என்பவரின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை தான் காதலிப்பதாக தெரிவித்தார். ராஜ்வேலை தான் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்ததாகக் கூறினார்.
இந்த நிலையில், பிரியா பவானி சங்கர் சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும், வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு, அழகு” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய இந்த இன்ஸ்டாகிராம் பதிவை வைத்து நெட்டிசன்கள் சிலர், பிரியா பவானி சங்கர் - ராஜ்வேல் காதல் பிரேக்அப் ஆகிவிட்டது. அந்த சோகத்தில்தான் இப்படி ஒரு பதிவிட்டிருக்கிறார் என்று வதந்தியைக் கிளப்பிட அந்த வதந்தி கை கால் முளைத்து சமூக ஊடகங்களில் வைரல் ஆகியது.
இதையடுத்து, கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதிரி, பிரியா பவானி சங்கர் காதலரை பிரிந்துவிட்டார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வாய்களைப் பொத்தி கியூட்டாக சிரித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரியாக்ட் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கம்மெண்ட் செய்துள்ள அவருடைய காதலர் ராஜ்வேல், “எக்ஸ்க்யூஸ் மி மேடம், நானும் வரலாமா?” என்று கமென்ட் செய்துள்ளார். இதனால், பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"