/tamil-ie/media/media_files/uploads/2021/09/Sembaruthi-Serial-2.jpg)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில், தொடக்கம் முதல் ஆதிகடவூர் அகிலாண்டேஸ்வரி என்று கலக்கி வந்த நடிகை பிரியா ராமன் சில எபிசோடுகளாக காட்டப்படாததால் அவர் இந்த சீரியலில் இனி இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை பிரியா ராமன் சீரியலில் இருந்து மாற்றப்பட்டால் செம்பருத்தி சீரியல் தொடங்கப்பட்டதில் இருந்து இப்போது வரை செய்யப்பட்ட மாற்றங்கள் என ஒரு பெரிய பட்டியலையே போடலாம் அந்த அளவுக்கு மாற்றங்கள் செய்யபப்ட்டுள்ளன.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் பெரிய பலமே சீரியல்கள்தான். அதிலும் ஒவ்வொரு டிவியிலும் ஒரு காலகட்டத்தில் பாப்புலர் சீரியலாக இருக்கும். அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் அந்த தொலைக்காட்சியின் முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வந்தாலும் தற்போது, அது ரசிகர்களின் மத்தியில் சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், அந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற முக்கிய கதாபாத்திரங்களை சீரியல் தயாரிப்புக்குழுவினர் மாற்றியது முக்கிய காரணமாக அமைந்தது.
செம்பருத்தி சீரியலில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, நடிகர்கள், நடிகைகள் சீரியலில் இருந்து விலகுவது என்பது அவ்வப்போது, நடந்து வருகிறது. இப்படி முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் விலகுவதால் வரவேற்பும் குறைந்துள்ளது. செம்பருத்தி சீரியலில் இதுவரை ஏற்கனவே ஆதி, ஐஸ்வர்யா, உமா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்கள் விலகியுள்ளனர். செம்பருத்தி சீரியலின் ஹீரோ ஆதி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி விலகியபோதே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துவிட்டது. அந்த அளவு அவருடைய நடிப்பு கச்சிதமாக இருக்கும். அவருக்கு பதிலாக, ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அக்னி, காதல், ஆக்ஷன், என எல்லா காட்சிகளிலும் ரசிகர்களைக் கவர தவறிவிட்டார் என்றே கூறுகிறார்கள்.
இந்த நிலையில்தான், செம்பருத்தி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா ராமனும் விலக உள்ளதாக தற்போது பேச்சு எழுந்துள்ளது. செம்பருத்தி சீரியல் தொடங்கியதில் இருந்து ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி என்று கலக்கி வந்த பிரியா ராமன் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் சீரியலில் காட்டப்படவே இல்லை. செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் சென்றிருந்தாலும், அவர் சிறையில் இருக்கும் ஒரு சில காட்சிகள் மட்டும் கடந்த மாதம் ஒளிபரப்பான எபிசோடுகளில் காட்டப்பட்டது. அதற்கு பிறகு, பிரியா ராமன் ஒரு மாதத்திற்கு மேல் காட்டப்படவில்லை.
செம்பருத்தி சீரியலில், ஐஸ்வர்யா - பார்வதி இடையேயான மோதலை மையமாக வைத்தே கதை நகர்ந்து வருகிறது. இதனால், அகிலாண்டேஸ்வரியாக நடித்து வந்த பிரியா ராமன் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி விட்டாரா? இந்த சீரியலில் இனி பிரியா ராமன் இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற செம்பருத்தி சீரியலில், ஹீரோ ஆதி, ஹீரோவுடைய அம்மா அகிலாண்டேஸ்வரி, ஹீரோவின் நண்பன் ஷ்யாம், அகிலாண்டேஸ்வரியின் மருமகள் என எல்லோரும் மாற்றபட்டுவந்தால் எப்படி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.