பெங்களூருவைச் சேர்ந்த ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்து பிரபலமானவர், பின்னர், சரவணன் மீனாட்சி சீரியல் அவருக்கு மிகப் பெரிய ஒரு வெற்றி சீரியலாக மாறியது, இதையடுத்து, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் முலம் பட்டிதொட்டி எங்கும் மேலும் பிரபலமானார்.
நடிகை ரக்ஷிதாவின் தந்தை வெள்ளிக்கிழமை காலை உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால், ரக்ஷிதா துயரத்தில் மூழ்கியுள்ளார். இதை கேள்விப்பட்ட ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் பெங்களூருக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ரக்ஷிதா மஹாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலம் பிரபலமானார். இந்த சீரியலில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்த சீரியலுக்குப் பின்னர் பல சீரியல்களில் நடிக்கத் துவங்கிய ரக்ஷிதா விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் மேலும் பிரபலமானார்.
சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டிரு ந்த ரக்ஷிதா, 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மிகவும் மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் திருமண வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்றது.
அப்போதுதான், ரக்ஷிதா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டுக்குள் தனது கணவர் தினேஷ் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஆனால், தினேஷ் வெளியே இருந்து தன்னுடைய மனைவிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்.
மேலும், சீரியல் நடிகர் தினேஷ் தங்களுக்குள் ஒரு சின்ன பிரச்னைதான், தன் மீதும் தவறு இருப்பதாக வெளிப்படையாக கூறினார், மேலும், தினேஷ் தன்னுடைய மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சீரியல் நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை சந்திக்க முயன்ற போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றனர். தினேஷ் மீது ரக்ஷிதா பொய் புகார் கொடுத்ததும் தெரியவந்தது.
இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தாலும், இதுவரை விவாகரத்து நடக்காத நிலையில், தொடர்ந்து இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ரக்ஷிதாவின் தந்தை உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த தனது தந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகவே ரக்ஷிதா பல வாய்ப்புகளை தவிர்த்துள்ளார்.
நடிகை ரக்ஷிதா தனது தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், தனது மனைவி ரக்ஷிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் பெங்களூரு விரைந்துள்ளதாக தன்னுடைய மனைவிக்கும் ஆறுதல் கூற சீரியல் நடிகர் தினேஷ் உடனடியாக பெங்களூருக்கு விரைந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“