விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், கடந்த சில தினங்களாக நடிகை ரச்சிதா காட்டப்படாததால், அவர் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக சின்னத்திரை உலகில் பேசப்படுகிறது. உண்மையில், ரச்சிதா சீரியலில் இருட்ந்து விலகிவிடாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் டிவியின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. அந்த சீரியல் குழுவினர் சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ரச்சிதா விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் டிவியில் நாச்சியார் சீரியலில் நடிக்கப் போனார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் முதல் சீசனில் ரச்சிதா இல்லை. நாம் இருவர் நமக்கு இருவர்’ முதல் சீசன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, ரச்சிதா, கணவர் தினேஷ் ஜீ தமிழ் சேனலில் தயாரித்து நடித்த ‘நாச்சியார்புரம்’ சீரியலில் அவருடன் நடித்துக் கொண்டிருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நாச்சியார்புரம் சீரியல் முடிக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் டிவி தரப்பிலிருந்து ரச்சிதாவை நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க அணுகியிருக்கிறார்கள். இதற்கு ஒப்புக்கொண்ட, ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சீசன் 2ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சூழலில்தான், கடந்த சில தினங்களாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், ரச்சிதா காட்டப்படாததால், ரசிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் ரச்சிதாவிடம், “நீங்க சீரியல்ல இருக்கீங்களா இல்லையா?” என்று கேட்க அந்த ரசிகரரைக் கடிந்து கொண்டுள்ளார்.
அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ரச்சிதா, “நான் சீரியல்ல இருக்கேனா, இல்லையாங்கிறதை சீரியலின் இயக்குனர் வசனம் எழுதறவங்ககிட்டப் போய் கேளுங்க” என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து வெளியேறிவிடாரா என்று விசாரித்தபோது, சீரியலில் ரச்சிதாவின் கேரக்டர் மாறுவது மாதிரி இருக்கிறது என்று ரச்ச்தா வருத்தத்தில் இருப்பதாக சீரியல் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
சீரியலில் இதுவரை நல்லவளாக இருந்துவந்த ரச்சிதாவின் கதாபாத்திரத்தை கெட்டவளா மாற்றுகிறார்கள் என்று ரச்சிதா தனக்கு நெருக்கமான சிலரிடம் வருத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விவகாரம் குறித்து, ரச்சிதா இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருப்பினும், விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், கேரக்டரை மாத்துவதால் நடிகை அதிருப்தி என்று ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருப்பதாக சீரியல் உலகில் பேசப்பட்டு வருகிறது.
ஆனாலும், ரச்சிதா தற்போது, கன்னடப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ரங்கநாயக்க என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதை ரச்சிதா படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார். தற்போது, ரச்சிதா தனது கன்னடப்படத்தில் நடிக்க பெங்களூரு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.