பழம்பெரும் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் திருமண விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா, சுஹாசினி, ரேவதி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ராதிகா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா. கார்த்திக்குடன் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ராதா, தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணநை்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ராதாவுக்கு கார்த்திகா மற்றும் துளசி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திகா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கோ படம் வெற்றி தான் என்றாலும் கூட அவரின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தால் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியது.
அதேபோல் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமான துளசி அடுத்து சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எந்த படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் இருவருமே நடிப்பில் இருந்து விலகி தொழிலை கவனித்து வரும் நிலையில், சமீபத்தில் கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முக்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இந்த விழா தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
தொடர்ந்து கார்த்தினா நாயரின் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில, இந்த திருமணத்தில் பங்கேற்ற நடிகை ராதிகா சரத்குமார், சுஹாசினி, ரேவதி ஆகியோர் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதில் ராதாவின் மகள் கார்த்திகா திருணத்தில் திருவனந்தபுரத்தில் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“