தே.மு.தி.க தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த தே.மு.தி.க தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா இன்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் சமாதிக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய துக்கம் தாளாமல் கண்ணீர் சிந்தினார். பின்னர் அருகில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருவுருப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதா, ”என்ன சொல்வதென்று தெரியவில்லை. சினிமாவில் இணைந்து நடித்த சில காலத்திற்குப் பிறகு, விஜயகாந்தை ஊட்டியில் ஒரு சூட்டிங்கில் பார்த்தேன். பிறந்த நாட்களின் போது அவருக்கு போன் செய்து பேசுவேன். அம்பிகா அக்கா பிரேமலதாவிடம் பேசியிருக்காங்க. என் பொண்ணோட கல்யாண பத்திரிக்கையை விஜயகாந்திடம் கொடுக்க முடியவில்லை. பிரேமலதாவிடம் கொடுத்தேன். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், பிரேமலதா என் பொண்ணோட கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து வாழ்த்திட்டு போனாங்க. இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.
விஜயகாந்தின் ஆசிர்வாதத்துடன் தான் அவங்க வந்திருப்பாங்க. அது எனக்கு பெரிய விஷயம், இந்த இடத்தில் விஜயகாந்தை இப்படி பார்ப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. ரொம்ப நல்லவர், நிறைய நல்லது செய்திருக்கிறார், அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். இதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியவில்லை. இவ்வாறு ராதா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“