நடிகை ராதாவின் மகள் நடிகை கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா. இவருக்கு கார்த்திகா மற்றும் துளசி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில், கார்த்திகா, 2011ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கார்த்திகா தமிழில் நடிக்க வருவதற்கு முன்னரே 2009ஆம் ஆண்டு ‘ஜோஷ்’என்ற தெலுங்கு படத்தில் இவர் அறிமுகமாகியிருந்தார். தெலுங்கு திரையுலகில் அறிமுகமான கார்த்திகா, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/8817bcaa-113.jpg)
பின்னர், சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கார்த்திகாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதேநேரம், கார்த்திகாவின் வருங்கால கணவர் யார், என்ன செய்கிறார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், நடிகை ராதா தனது மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/4027bb2e-46d.jpg)
அதில், விரைவில் ஒரு புதிய குடும்பத்திற்கு நாங்கள் கொடுக்கும் இளம் பெண்ணைப் பற்றி நான் பெருமைப்படாமல் இருக்க முடியாது. மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்காக இந்த அழகான குடும்பத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்ல முடியாது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதைப் பற்றியது என்று நான் நம்புகிறேன். என் இதயம் இப்போது பல கலவையான உணர்வுகளுடன் இயங்குகிறது. ஆனால் அதிக அதிர்வு உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே. எந்த தாயும் விரும்பும் சிறந்த மகள் கார்த்திகா. நீங்கள் எங்கள் குடும்பங்களுக்கு சிறந்த பரிசாக இருந்தீர்கள். நீங்கள் எனக்கு அளித்த இந்த அற்புதமான அனுபவத்திற்கு நன்றி அன்பே, என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கார்த்திகா ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். கையில் மோதிரத்துடன் யாரோ ஒரு ஆணை கட்டிப்பிடித்திருப்பது போன்ற அந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் பலர் லைக்ஸ்களை குவித்தும், கமெண்டுகளில் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
நடிகை கார்த்திகாவின் காதலன் யார் என்ற தகவலை அவரே சில நாட்களுக்குள் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், நடிகை ராதா வெளியிட்டுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“