பாவனா பெரிய ஆளுதான், ஆனா‌ யோகிபாபுவை அப்படி பண்ணது தப்பு; நடிகர் ராதாரவி ஓபன் டாக்!

சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் யோகிபாபு மற்றும் விஜே பாவனாவுக்கு இடையே நடந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்ட நிலையில் நடிகர் ராதாரவி அந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் யோகிபாபு மற்றும் விஜே பாவனாவுக்கு இடையே நடந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்ட நிலையில் நடிகர் ராதாரவி அந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
yogi bhavana

அண்மையில் நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தினார். இந்த தொடக்க விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார். அந்த விழாவில் யோகிபாபுவும் கலந்துக்கொண்டார். இந்த விழாவில்தான் யோகிபாபுவை பாவனா அவமதித்ததாக கூறி ரசிகர்கள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் விழாவில் இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்  இணையத்தில் வைரலானது. இதையடுத்து "யோகிபாபு என்றால் உங்களுக்கு கேவலமா என கேட்டு நெட்டிசன்கள் கமென்ட்டுகளை பதிவிட்டனர். மேலும் வொர்ஸ்ட் பிஹேவியர் பாவனா என டேக் செய்து வந்தனர். 

Advertisment

இந்நிலையில் நடிகர் ராதாரவி, திரைக்குரல் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் நடிகை பாவனா மற்றும் நடிகர் யோகிபாபு உரையாடல் குறித்து பேசியுள்ளார். ராதாரவி நடிகை பாவனாவை ஒரு வெற்றிகரமான நபர் என்றும், அவர் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் சகோதரி என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் இயற்கையாகவே செல்வம் மிக்கவர் என்றும், ஒரு சிறந்த தொகுப்பாளினி என்றும் தெரிவித்துள்ளார்.  

அதே சமயம், ராதாரவி, யோகிபாபு வளர்ச்சியை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் கூறினார். மேலும் யோகிபாபுவின் இன்றைய நிலை குறித்து ராதாரவி விவரித்தார். யோகிபாபு தனியாக வளர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயக்குனர்கள் தங்களது படங்களில் யோகிபாபுவை நடிக்க வைக்க மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும், கதைக்கு அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் தேவையில்லை என்றாலும்கூட, அவரை படத்தில் இடம்பெறச் செய்ய விரும்புகிறார்கள் என்றும் கூறினார். அந்த அளவிற்கு அவர் சினிமாவில் வளர்ந்து தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார் என்று ராதாரவி கூறினார்.

Advertisment
Advertisements

இதற்கு உதாரணமாக, விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை ராதாரவி சுட்டிக்காட்டினார். அக்காட்சியில், யோகிபாபுவும் விஜய்யும் குடித்துக்கொண்டே ஒரு பாடலை பாடுவார்கள். இந்த காட்சி படத்திற்கு பெரிய பங்களிப்பை வழங்கவில்லை என்றாலும், யோகிபாபுவின் புகழின் காரணமாகவே அது சேர்க்கப்பட்டது. அந்த அளவிற்கு யோகிபாபு வளர்ந்துள்ளார் என்றார். 

Bhavana Radharavi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: