நான் பெருமையாக நினைக்கும் நபர்; இவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார்: நிகழ்ச்சியில் உண்மை உடைத்த ராதிகா

சீரியல் நடிகைகளில் நடிப்பில் யாராலும் மிஞ்ச முடியாத ஒரு நடிகை தான் ராதிகா. அவர் திரைப்படங்களிலும் நடிப்பில் அசத்தியுள்ளார். அனால் அவர் இப்போது மேடையில் சகா நடிகை ஒருவரை பாராட்டியுள்ளார். அது யார் என்று பார்க்கலாம்.

சீரியல் நடிகைகளில் நடிப்பில் யாராலும் மிஞ்ச முடியாத ஒரு நடிகை தான் ராதிகா. அவர் திரைப்படங்களிலும் நடிப்பில் அசத்தியுள்ளார். அனால் அவர் இப்போது மேடையில் சகா நடிகை ஒருவரை பாராட்டியுள்ளார். அது யார் என்று பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
radhika

நடிகையாகவும் தயாரிப்பாளராகவும், சின்னத்திரை நடிகை மற்றும் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார் ராதிகா சரத்குமார்.

Advertisment

இவர் பல ஆண்டுகளாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். வெள்ளந்தியான நாயகியாக துவங்கிய இவரது நடிப்புப் பயணம் சடாரென மாறி விடவில்லை.

அதற்காக ராதிகா செய்த மெனக்கெடல்கள் அதிகம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நாயகியாக களமிறங்கிய ராதிகா, அதிரடி ஆக்ஷன் ஹீரோயினராக தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடர்ந்தார். தற்போது தன்னுடைய வயதிற்கேற்ற கேரக்டர்களில் ஹீரோக்களின் அம்மாவாக தொடர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் ஒரு மேடையில் நடிகை மீனாவை பற்றி புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல் பெண்களுக்கு இந்த சமூகமும் இந்த துறையும் எவ்வளவு கடினம் என்பதை பற்றியும் பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisment
Advertisements

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்த நடிகை மீனா, தற்போது தனது திரைப்பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதை சிறப்பிக்கும் வகையில், மார்ச் 2023-ல், சென்னையில் பிரம்மாண்டமான "மீனா 40" விழா நடந்தது. இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மீனாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். 

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியை கௌரவிக்க இவ்வளவு பெரிய விழா நடத்தப்படுவது இதுவே முதல் முறை. குஷ்பு, போனி கபூர், ஜீவா, சரத் குமார், ராதிகா சரத் குமார், சங்கர், ரோஜா, பிரபு தேவா, சினேகா, பிரசன்னா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை ராதிகாவை மேடையில் அழைத்து மீனாவை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேச அழைத்தபோது அவர் "பொதுவாக திரையுலகில் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டாலோ, அல்லது குழந்தை பிறந்து விட்டாலோ.. அவ்வளவு தான் என்று கூறி விடுவார்கள்.

ஆனால், அது அனைத்தையும் கடந்து வந்து, மனதில் உள்ள சோகத்தை மிகவும் அழகாக கையாண்டு வாழக்கையை நடத்தி வருகிறார் மீனா. எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை இவர் தான். ரியல் சூப்பர்ஸ்டாரும் இவர் தான்" என்று அனைவரின் முன்பு பாராட்டியுள்ளார். 

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். நடிகர் ரஜினிகாந்த்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார் மீனா. 

கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த மீனாவிற்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய், அரவிந்த் சாமி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் நைனிகா. குறிப்பாக தெறி படம் இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தது.

ராதிகா மட்டுமல்லாமல் திரையுலகில் அனைவராலும் பாராட்டப்படும் நடிகை மீனா என்பது குறிப்பிடத்தக்கது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: