/indian-express-tamil/media/media_files/vubLGCUjN3iRV9QEtiKV.jpg)
நடிகை ராதா மகள் நடிகை கார்த்திகா – ரோஹித் திருமணம்; புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்திய ராதிகா சரத்குமார்
நடிகை ராதாவின் மகள் நடிகை கார்த்திகாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா.இவருக்கு கார்த்திகா மற்றும் துளசி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில், கார்த்திகா, 2011ஆம் ஆண்டு வெளியான ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.பின்னர் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கார்த்திகா தமிழில் நடிக்க வருவதற்கு முன்னரே 2009ஆம் ஆண்டு ‘ஜோஷ்’என்ற தெலுங்கு படத்தில் இவர் அறிமுகமாகியிருந்தார். தெலுங்கு திரையுலகில் அறிமுகமான கார்த்திகா, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.
பின்னர், சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கார்த்திகாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தநிலையில், நடிகை கார்த்திகாவின் திருமணம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. கார்த்திகா தனது காதலர் ரோஹித்தை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
கார்த்திகா – ரோஹித் திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள காவடியார் உதயபாலஸ் மாநாட்டு அரங்கில், கேரள பாரம்பரிய முறைப்படி இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவர்களது திருமணத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, பாக்யராஜ், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, ரேவதி, மேனகா, பூர்ணிமா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.