scorecardresearch

என் இனிய இயக்குனர் அவர்களே..!பாரதிராஜாவுக்காக பிரான்சில் பிரார்த்தனை செய்த ராதிகா!

பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகளாக ராதிகாவை தனது கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா

என் இனிய இயக்குனர் அவர்களே..!பாரதிராஜாவுக்காக பிரான்சில் பிரார்த்தனை செய்த ராதிகா!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று கூறி நடிகை ராதிகா பிரான்சில் பிரார்த்தனை செய்துள்ளார்

ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான இயக்குனர் பாரதிராஜா, தற்போது இயக்கத்தில் இருந்து ஓய்வு பெற்று நடிகராக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவர் கண்கானிப்பில் இருந்து வரும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை சிகிச்சை முடிந்து 4 நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியானது.  

இதனைத் தொடர்ந்து பாரதிராஜா விரைவில் நலம்பெற வேண்டும் என்று கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து மருத்துவமனை சென்று பாரதிராஜாவை சந்தித்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ராஜா நகைச்சுவை உணர்வுடன் நன்றாக இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே நடிகை ராதிகா,  பாரதிராஜா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரான்சில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். தற்போது பிரான்சில் இருக்கும் நடிகை ராதிகா, அங்குள்ள லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏந்தி பாரதிராஜாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராதிகா, “என் இனிய இயக்குநர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை. நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். உங்களை விரைவில் காண வேண்டும். ஆரோக்கியமாக இருங்கள். உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகளாக ராதிகாவை தனது கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress radhika sarathkumar special prayer in france for director bharathiraja