Actess Radhika Updated Serial Actor Venu Aravind Health : சின்னத்திரை நடிகர் வேனு அரவிந்த் கோமாவில் இருப்பதாக மீடியாக்களில் தவறான செய்தி வெளியிடுவது வேதனையாக இருக்கிறது என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
1990-ம் ஆண்டு பொதிகை தொலைககாட்சியில் ஒளிபரப்பான நிலா பெண் என்ற தொடரின் மூலம் சினத்திரையில் அறிமுகமானவர் வேணு அரவிந்த. ஒரு சில திரைப்படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் சின்னதிரையில் ராதிகாவின் ஹிட் சீரியல்களாக அரசி, செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி போனற தொடர்களில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.
கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் நடித்திருந்த அவர், அதன்பிறகு எந்த சீரியலிலும் நடிக்காத நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இவர், அடுத்த சில நாட்களிலேயே நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
தற்போது இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை அந்த கட்டியை அகற்றியுள்ளனர். அதன்பிறகு வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜயசாரதி கூறியிருந்தார். ஆனால் தற்போது வேணு அரவிந்த் உடல்நிலை தேறி வருவதாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து குறித்து நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில்
வேனு அரவிந்த் கோமாவில் இருப்பதாக மீடியாக்களில் தவறான அரவிந்த் வெளியிடுவது வேதனையாக இருக்கிறது. அவரின் உடல் நிலை குறித்து அவரது மனைவியிடம் கேட்டு அறிந்துகொண்டு வருகிறேன். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் தற்போது தெறி இருக்கிறார். மிகவும் அருமையான மனிதர், அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil