/indian-express-tamil/media/media_files/cRduWts96vFEvuE7uT8m.jpg)
நடிகை ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா ராதிகா சினிமா, டிவி சீரியல் என பிஸியாக இருந்தவர், முழு நேர அரசியலில் இறங்கி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும், சோர்வில்லாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அண்மையில், சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணத்தில் கணவர் சரத்குமாருடன் சென்று ராதிகா கலந்துகொண்டார். வரலட்சுமி திருமணத்தின்போது, சரத்குமார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அரசியல், குடும்ப நிகழ்வுகள் என்று பிஸியாக இருந்தாலும், நடிகை ராதிகா சரத்குமார், ஃபிட்னஸில் கவனம் செலுத்தத் தவறியதே இல்லை. வொர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருப்பதில் கவனமாக இருப்பார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அவ்வப்போது வொர்க் அவுட் புகைப்படங்களையும் வெளியிட்டு மற்றவர்களையும் ஊக்கப்படுத்துவார்.
அந்த வகையில், நடிகை ராதிகா சரத்குமார், பெரும்பாலான பெண்கள் குடும்பத்தை ஆரோக்கியத்திற்கு மேல் வைத்துள்ளனர், தயவுசெய்து அந்த 1 மணி நேரத்தை உங்களுக்கே கொடுங்கள் என்று ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தைப் பதிவிட்டு கூறியிருப்பதாவது: “ஆரோக்கியமே செல்வம் பெரும்பாலான பெண்கள் குடும்பத்தை ஆரோக்கியத்திற்கு மேல் வைத்துள்ளனர், தயவுசெய்து அந்த 1 மணி நேரத்தை உங்களுக்கே கொடுங்கள், குடும்பம் எப்போதும் அங்கே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு வொர்க் அவுட் செய்வதுடன் மற்ற பெண்களும் வொர்க் அவுட் செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டுகோள் விடுத்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.