/tamil-ie/media/media_files/uploads/2022/12/rama-prabha-rajini.jpg)
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து உதவி கேட்டு ரஜினி வீட்டுக்கு சென்றபோது, யோசிக்காமல் உதவி செய்தார் என நடிகை ரமா பிரபா மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
பழம்பெரும் நடிகையான ரமா பிரபா, தமிழில் சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், பட்டணத்தில் பூதம், வசந்த மாளிகை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். பிஸியாக நடித்து வந்த ரமா பிரபா கதாநாயகிகளுக்கு இணையாக சொத்துக்களையும் சம்பாதித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் சொத்துக்களை இழந்து கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்ததாக தன் மலரும் நினைவுகளை ரமா பிரபா பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ரஜினியின் ‘பாபா’ ரீ-ரிலீஸ்; புதுசா என்ன இருக்கு? மாற்றங்கள் என்ன?
இதுகுறித்து ரமா பிரபா அளித்துள்ள பேட்டியில், ''ரஜினிகாந்த் எத்தனையோ கஷ்டங்கள், அவமானங்களை தாண்டித்தான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்துள்ளார். இவ்வளவு உயர்வுக்கு பிறகும் எளிமையாகவும், அடக்கமாகவும் இருக்கிறார். கஷ்டத்தை அவர் புரிந்து கொண்டு உதவி கேட்டு வந்தவர்களை வெறும் கையோடு அனுப்புவது இல்லை.
அவரிடம் உதவி கேட்டவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒருவரை நம்பி மோசம் போனேன். சொத்துகளை எல்லாம் இழந்து நடுரோட்டுக்கு வந்தேன். அந்த சமயத்தில் வேறு வழி தெரியாமல் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றேன். அப்போது வழி செலவுக்கு பணம் கொடுத்தால் போதும் என நினைத்தேன்.
என் நிலைமையைப் பார்த்து ரஜினி மிகவும் வருத்தப்பட்டார். உடனே தன்னிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்து கொடுத்தார். அந்த நாட்களில் 40 ஆயிரம் ரூபாய் என்பது பெரிய பணம். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அவரிடம் இருந்ததை அப்படியே தூக்கி என்னிடம் கொடுத்து விட்டார். அந்த பணத்துடன் எனது பல கஷ்டங்கள் தீர்ந்து விட்டன. அவருக்கு எப்போதும் கடன் பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.