/indian-express-tamil/media/media_files/2025/04/21/4XIRDxQjVyGlaKmIWj6Q.jpg)
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. 'அழகிய லைலா-வான ரம்பாவிற்கு', 90ஸ்-களில் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இன்றளவும் கூட பலருக்கும் பிடித்தமான நடிகையாக ரம்பா திகழ்கிறார்.
அப்போதைய காலகட்டத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த பெருமை ரம்பாவிற்கு இருக்கிறது. ரம்பாவின் தனிச் சிறப்பே நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்துவது தான். குறிப்பாக, சுந்தர். சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன் உள்ளிட்டோருடன் ரம்பா நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் இவரது கலைப்பயணத்தில் பெரும் வெற்றியை பெற்றது. தற்போதும் கூட பலருக்கும் விருப்பமான நடிகையாக ரம்பா திகழ்கிறார்.
கமல்ஹாசனுடன் காதலா, காதலா, ரஜினிகாந்துடன் அருணாச்சலம், விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களிலும் நடிகை ரம்பாவின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் என்பவரை திருமணம் செய்த ரம்பா, அதன் பின்னர் கனடாவில் வசித்து வந்தார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த சூழலில் நடிகை ரம்பா சின்னத்திரை மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக ரம்பா இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை நடிகை ரம்பா தற்போது தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரம்பா, இது குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, "எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது, என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை, குறைந்தபட்சம் தாய், தந்தை இருவரில் ஒருவராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குழந்தைகளுடன் இருந்தேன். ஆனால், நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும், என்னுடைய முதல் காதல் எப்போதுமே சினிமாதான்" எனத் தெரிவித்துள்ளார். எனினும், நடிகை ரம்பா தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.