/indian-express-tamil/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-233043-2025-08-16-23-30-59.jpg)
கலாட்டா பிங்க் கோல்டன் கியூன் விருது வழங்கும் விழாவில் நடிகை ரம்பா மேடை ஏற்றப்பட்டார். அப்போது நடிகை ரம்பா, நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகர் விவேக் இணைந்து நடித்து பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஒரு ஸ்வீட் சாப்பிடுகிறதே என்னும் காமெடி ரீ-கிரியேட் செய்யப்பட்டது.
குறிப்பாக, தொகுப்பாளரும் மிமிக்ரி கலைஞருமான அஸார் நடிகர் விவேக் போல பேசிக்காட்டி அதை ரீ- கிரியேட் செய்தார். அப்போது, நடிகர் விவேக் கொடுப்பதுபோலவே, ஒரு சாய்பாபா போட்டோ நடிகை ரம்பாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடிகை ரம்பா, மறைந்த நடிகர் விவேக் குறித்து கண்கலங்கி விழாமேடையில் பேசினார். அதில், "விவேக் சாரே இருந்து கொடுத்து இருந்தார் என்றால் ரொம்ப சிரிச்சு இருப்பேன். இப்பவும் சிரிக்கிறேன். ஆனால் கண்ணீர் வருகிறது" என்றார். விவேக் சார் இல்லை என்று யார் சொன்னார்.
அவங்களுடைய கைத்தட்டல் மூலமாக விவேக் சார் இருக்கிறார். பல இடங்களில் அவர் வைத்த செடி, மரமாகி நிழலையும் காயையும் தருகிறது. இன்னும் விவேக் சார் நம்மகூடதான் இருக்கிறார்' என வெல்வெறு வார்த்தைகளில் தேற்றினார், தொகுப்பாளர் அஸார்.
அப்போது நடிகை ரம்பா, ”அவர் கூட சும்மா சண்டைபோட்டுட்டேனோ.. நான் விவேக் சார் கூட 5 வருஷமாகப் பேசவில்லை. செட்டில் இருந்தால் கூட, பேசியிருக்கமாட்டேன். மூஞ்சியை திருப்பிக்கிட்டுப் போயிருப்பேன். ரொம்பத் திமிர் பிடிச்சப்பொண்ணு” என்று தன்னைப் பற்றியே விமர்சித்துப் பேசினார்.
மேலும் பேசிய நடிகை ரம்பா, ”அவர் இறப்புப் பற்றிய செய்தியைக் கேட்கும்போது நான் ரொம்ப அழுதேன். நான் வந்து கனடாவில் இருந்தேன், வீட்டில். யாருக்கும் தெரியாது. நான் அழுறதைப் பார்த்து என் கணவர் என்னிடம் கேட்டார்.
அப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும்போது கண்ணாடியைத் தராமல் கிண்டல் பண்ணியதை சொன்னேன். ரொம்ப திமிர்பிடிச்சப் பொண்ணுல்ல. ரொம்ப பிடிவாதப் பொண்ணு. அதனால், இப்போ என் பிடிவாதம் எல்லாத்தையும் விட்டுட்டேன்” என்றார்,நடிகை ரம்பா.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.