Advertisment

நடிகை ரம்பாவின் மகளா இவர்? ரசிகர்கள் ஆச்சரியம்! தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி

நடிகை ரம்பா வெளியிட்ட தனது மகள் லான்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
rambha daughter xy

நடிகை ரம்பா வெளியிட்ட தனது மகள் லான்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் 90-களில் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினிகாந்த், விஜய், அஜித், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை ரம்பாவுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

Advertisment

rambha daughter xy

நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக ரம்பா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும், நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார்.

rambha daughter xy

இந்நிலையில், நடிகை ரம்பா வெளியிட்ட தனது மகள் லான்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

rambha daughter xy

தனது குடும்பத்துடன் இலங்கை சுற்றுலா சென்ற நடிகை ரம்பா யாழ்பாணம் கடற்கரையில், தனது கணவர், மகள்கள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில், ரம்பாவுடன் அவருடைய மகள் லான்யா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த புகைப்படத்தில், நடிகை ரம்பாவின் மகள் லான்யா ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார்.

rambha daughter xy

நடிகை ரம்பா வெளியிட்ட இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும், ரம்பாவின் மகளா இவர், நம்பவே முடியவில்லை, இவ்வளவு வளர்ந்துவிட்டாரே என்று மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகை ரம்பாவைப் போல அவரது மகள் லான்யாவும் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கலாம் என்றும் தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

rambha daughter xy

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rambha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment