1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. ஆந்திராவைச் சேர்ந்த இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. தெலுங்கில் ஆ ஒக்கடி ஆக்ஹு என்ற படத்தில் ரம்பா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் , அடுத்தடுத்து கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதனால் அவரது பெயரை ரம்பா என்று மாற்றிக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, நடிகை ரம்பாவை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சுந்தர் சி. தான். சுந்தர் சி இயக்கிய 'உள்ளத்தை அள்ளி தா' படத்தின் மூலம் ரம்பா கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்தப் படம் அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், கோலிவுட்டில் பிரபலமான கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ரம்பா பெற்றார்.
விஜய், அஜித் , ரஜினி, கமல் போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார் . நடிகை ரம்பா 2010 ஆம் ஆண்டு இந்திரகுமாரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு வெளியேறி தனது கணவருடன் கனடாவில் குடியேறினார்.
இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுமார் 13 வருடங்களாக சினிமாவில் நடிக்காத ரம்பா , விரைவில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க உள்ளார். ரம்பா அதைப் பற்றிய கதைகளைக் கேட்டு வருகிறார்.
சமீபத்திய ஒரு நேர்காணலில், நடிகை ரம்பா தனது சினிமா வாழ்க்கையை பற்றியும், நடிக்க முடியாமல் போன படங்களை பற்றியும் மனம் திறந்து பேசினார். இதன்படி, எஸ்.ஜே. சூர்யா இயக்கிய, அஜித் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'வாலி'யில் தான் தான் முதலில் நடிக்க இருந்த கதாநாயகி என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
படத்தில் சிம்ரன் நடித்த வேடத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா முதலில் ரம்பாவை அணுகினாராம், அதன் பிறகு அவர்கள் ஒரு போட்டோஷூட்டையும் நடத்தியுள்ளனர். ஆனால், ரம்பாவுக்கு சில குழப்பங்கள் இருந்ததால் அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இருப்பினும், அந்தப் படத்தைத் தவறவிட்டதற்கு வருத்தமில்லை என்றும், சிம்ரன் அந்த கதாபாத்திரத்தை மிக அழகாகச் செய்திருந்ததாகவும், அவர் நடித்திருந்தாலும், அவ்வளவு நடித்திருக்க மாட்டார் என்றும் ரம்பா கூறியுள்ளார் .
இதை நேர்காணலை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.