தமிழ் சினிமாவில் பாகுபலி திரைப்படத்திற்கு அடுத்து எந்த விதமான கதையையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என கூறியுள்ள நடிகை ரம்பா, தமிழ் சினிமாவில் நல்ல கதைகள் இல்லாததால் நடிகைகள் பிற மொழிகளில் நடிக்க செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகை ரம்பாவிற்கு சொந்தமான மேஜிக் ஹோம் ("Magick Home") என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையை கோவை சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில், நடிகை ரம்பாவும் மற்றும் அவரது கணவரும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான இந்திரகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரம்பா கூறுகையில்,
மேஜிக் ஹோம் (Magick Home) நிறுவனத்தின் முதல் கிளை சென்னையில் முதல் கிளை செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் இரண்டாவது கிளையை கோவையில் திறந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அடுத்த கிளையை திறக்க இருக்கிறோம். வருகின்ற ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 30-க்கு மேற்பட்ட கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
நான் 2010-ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. அந்த காலத்தில் சினிமாவில் நடித்தது மிகப்பெரிய வெற்றி கிடைத்ததுஇ தற்போது இருக்கக்கூடிய கதைகளில் நடித்தால் எனது பிள்ளைகள் கூட விரும்பி திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் பாகுபலி திரைப்படத்திற்கு அடுத்து எந்த விதமான கதையையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தற்போது நல்ல கதைகள் இல்லாததால் நடிகைகள் பிற மொழிகளில் நடிக்க செல்கின்றனர்.
உள்ளத்தை அளித்தால் படத்தில் வெளியான பாடல் தற்போது ட்ரெண்டாகி வருவதால் அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போ நடித்தது போல் கதைகள் தற்போது தமிழ் சினிமாவில் இல்லை. பெண்களுக்கான நல்ல கதைகள் தமிழ் சினிமாவில் அமைவது இல்லை. வருங்காலத்தில் நல்ல கதைகள் அமைந்தால் கட்டாயமாக சினிமாவில் நடிப்பேன். நடிகர் விஜய் தன்னை சந்தித்தது குறித்து கேட்கிறார்கள். அது குறித்து இன்னொரு நாள் சொல்கிறேன்.
காமெடி நடிகர் யோகி பாபு வீட்டின் சமையலறைக்கு எனது நிறுவனம் தான் டிசைனிங் செய்து வருகிறது. அதுபோல பல்வேறு பிரபலங்களுக்கும் டிடைனிங் செய்து வருகிறோம். தற்போது இருக்கக்கூடிய பெண்கள் சமூக வலைதளங்களில் சமையல் அறை குறித்து யாரும் ரீல்ஸ் போடவில்லை. சண்டை போடுவது, சாப்பிடுவது போல தான் ரிலீஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். அனைவரும் தங்கள் சமையலறைகளை ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.