/indian-express-tamil/media/media_files/KJpjhZSkdpWeldRF48cr.jpg)
குடும்பத்துடன் நடிகை ரம்பா
90-களின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. 1992-ல் தெலுங்கில் வெளியான ஆ வொக்கட்டே அடக்கு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 
/indian-express-tamil/media/media_files/iTP2V26qQhCUxXCkrKcf.jpg)
செங்கோட்டை, சுந்தரபுருஷன், தர்மசக்கரம், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரம்பா, முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். 
மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 என ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ள ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பதை திருமணம் செய்துகொண்டார். 
/indian-express-tamil/media/media_files/8fAh8n2zKhktkBCmFFJ7.jpg)
ரம்பாவின் கணவர் இந்திரகுமாரின் முயற்சியால் யாழ்பானத்தில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைகழகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தில் சம்பிர்தாயபூர்வமாக பால் காய்ச்சி சாமி படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us