Actress Ramya Krishnan Becomes Bigg Boss Anchor: தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கி தொகுப்பாளராகியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனையும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில், இந்த வாரம், தெருக்கூத்து, வில்லிசை, பாவைக் கூத்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அதை அவர்கள் டாஸ்க்கில் நிகழ்த்திக்காட்டினார்கள். இதில், இயக்குனர் சேரன் மற்றொரு போட்டியாளர் முகேன் இருவரும் சிறப்பாக செயல்பட்டதாக தேர்வு செய்யப்படனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டது. தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 பிரபலங்கள் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள புரமோவை ஸ்டார் மா டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் சிவகாமியாக சிறப்பாக நடித்ததன் மூலம் பாராட்டப்பட்டார். இந்த புரமோவில், ரம்யா கிருஷ்ணன் பாகுபலி சிவகாமி கெட்டப்பில் வந்து தொகுத்து வழங்குகிறார்.